Home
News

ஏஎன்சி அம்சத்தோடு அட்டகாச சியோமி பிளிப்பட்ஸ் ப்ரோ: சிறந்த வடிவமைப்பு குறைந்த விலை!

சியோமி நிறுவனம் தனது புதிய பிளிப் பட்ஸ் ப்ளோ ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸை சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. மேலும் ப்ரீமியர் ஏர்பட்ஸ் ப்ரோ போன்றே வடிவமைப்பை உள்ளடக்கியது. இந்த பிளிப்பட்ஸ் ப்ரோ இரட்டை பயன்முறை ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்களில் பாடல் கேட்கும்போது இது சுற்றுப்புற ஒலியை கேட்கவும் அனுமதிக்கிறது. ப்ளிப்பட்ஸ் ப்ரோ சியோமி வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த இயர்பட்ஸ் பேட்டரி ஆயுள் ஒரே சார்ஜிங்கில் 28 மணிநேர ஆயுள் உடன் வருகிறது.

இயர்பட்ஸ் இந்திய விலை மதிப்பு

இயர்பட்ஸ் இந்திய விலை மதிப்பு

இந்த இயர்பட்ஸ் இந்திய விலை குறித்து பார்க்கையில், இது தோராயமாக ரூ.9,100 ஆக இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் சீனாவில் மே 21 முதல் வாங்குவதற்கு கிடைக்கும். புதிய இயர்பட்ஸ் உலகளாவிய கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்து நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சியோமி பிளிப் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ்

சியோமி பிளிப் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ்

சியோமி பிளிப் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 16 ஓம் மின்மறுப்போடு வருகிறது. இது 11 மிமீ சூப்பர் டைனமிக் டிரைவர்களைக் கொண்டிருக்கிறது. இதில் மேம்பட்ட நாய்ஸ் ரத்து அம்சத்தோடு மூன்று மைக்ரோபோன்கள் காதுகுழாய்களில் உள்ளது. உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்கள் மூலம் இது தெளிவான ஆடியோ உள்ளீடு வழங்க குவால்காமின் க்யூசிசி 5151 சிப்செட் பயன்பாடு இருக்கிறது. ப்ரீமியம் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களை போலவே இதில் நாய்ஸ் ரத்து அம்சம் இருக்கிறது.

40 டெசிபல் வரை நாய்ஸ் ரத்து அம்சம்

40 டெசிபல் வரை நாய்ஸ் ரத்து அம்சம்

இது அதிகபட்சமாக 40 டெசிபல் வரை நாய்ஸ் ரத்து அம்சம் இருக்கிறது. அதேபோல் இது பின்னணி இரைச்சலை 99% வரை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இயர்பட்ஸ்களில் மூன்று வெவ்வேறு நாய்ஸ் ரத்து அம்சம் இருக்கிறது. வாகனம் ஓட்டும்போது இசை கேட்டாலும் பின்புற ஒலியை கேட்க இது அனுமதிக்கிறது. அதேபோல் இது கணினி செயல்பாடுகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் மோட்டார்கள் போன்ற ஒளி சத்தத்தை குறைக்க அனுமதிக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்க முடியும்

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்க முடியும்

பிளிப்பட்ஸ் ப்ரோ விளையாட்டாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இது இரட்டை ஸ்மார்ட் இணைப்பு அம்சத்தோடு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதில் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்க முடியும். ஒரே நேரத்தில் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை இதில் இணைக்கலாம். இதன் வடிவமைப்பு காதுகளில் இருந்து இயர்பட்ஸ் கீழே விழாத படி இருக்கிறது. இதில் லேப்டாப்பில் திரைப்படம் பார்க்கும் போதே தொலைபேசியில் அழைப்புகள் மேற்கொள்ள முடியும்.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பிளிப்பட்ஸ் ப்ரோ ஓவல் வடிவ அமைப்போடு வருகிறது. இது 5000-க்கும் மேற்பட்ட சோதனைகள், 10,000 மேற்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இயர்பட்ஸ் 28 மணிநேர பயன்பாட்டையும், நாய்ஸ் ரத்து ஆக்டிவேட் மோடில் இருக்கும் போது 22 மணிநேர பேட்டரி ஆயுளையும் வழங்குகிறது. இது யூஎஸ்பி டைப்சி போர்ட் இணைப்பு இருக்கிறது. இதை 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 2 மணிநேர ப்ளேபேக் அம்சத்தை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi FlipBuds Pro TWS Earbuds Launched With Active Noise Cancellation, Immersive Sound Experience
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X