Home
News

இந்த Xiaomi போன் உங்ககிட்ட இருக்கா? இருந்தா இனி ஜெட் ஸ்பீட் இன்டர்நெட்.. புது WiFi 7 அப்கிரேட் பெரும் Mobile..

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சியோமி போர்ட்ஃபோலியோவில் உள்ள சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் (smartphone) மாடல்கள் உறுதியான வைஃபை 7 (WiFi 7) அப்கிரேட்டை பெரும் என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய வைஃபை 7 சியோமி ஸ்மார்ட்போன் அப்கிரேட் (WiFi 7 Xiaomi Smartphone Upgrade) மூலம் சியோமி சாதனங்கள் அதிவேக இன்டர்நெட் சேவையை (superfast internet) பெரும் என்றும், இது ஜெட் ஸ்பீட் இணைய (faster network speed) இணைப்பை குறைந்த லோ-லேடன்சியுடன் (lower latency) வழங்கும் என்றும் சியோமி அறிவித்துள்ளது. இது சியோமி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புதிய வேகத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த Xiaomi போன் உங்ககிட்ட இருக்கா? இருந்தா இனி ஜெட் ஸ்பீட் இன்டர்நெட்

இதன் மூலம் சியோமி பயனர்களின் ஸ்மார்ட்போன் (Xiaomi smartphone users) அனுபவம் அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சரி, இப்போது இந்த புதிய அப்கிரேட்டை பெரும் ஸ்மார்ட்போன் சாதனங்கள் எது? என்ற விபரத்தை பார்க்கலாம். சியோமி அறிவித்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, சியோமி இன் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இந்த வைஃபை 7 அப்கிரேட் கிடைக்கும்.

சியோமி போன்களுக்கு வைஃபை 7 (Xiaomi Phones Get WiFi 7):

இந்த பட்டியலில் சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14), சியோமி 13 (Xiaomi 13) சீரிஸ், சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 (Xiaomi MIX Fold 3) போன்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உங்களிடம் இந்த சீரிஸ் வரிசையில் உள்ள போன்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், நீங்களும் வைஃபை 7 அம்சத்தை (WiFi 7 feature) பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த Xiaomi போன் உங்ககிட்ட இருக்கா? இருந்தா இனி ஜெட் ஸ்பீட் இன்டர்நெட்

வைஃபை 6E vs வைஃபை 7 தொழில்நுட்பம் (WiFi 6E vs WiFi 7 Technology):

தெரியாதவர்களுக்கு, நாம் இப்போது பயன்பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வைஃபை தொழில்நுட்பம் வைஃபை 6E (WiFi 6E) ஆகும். இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை வைஃபை தொழில்நுட்பமாக அறிமுகமாகியிருக்கும் அம்சம் தான் வைஃபை 7 (WiFi 7). அடுத்து வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களில் இந்த வைஃபை 7 அம்சத்தை நாம் இயல்பாக பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், சியோமி போன்ற நிறுவனங்கள் இப்போதே அதன் சாதனங்களுக்கு வைஃபை 7 ஆதரவை வழங்குவது பாராட்டிற்குரியது. உண்மையை சொல்ல போனால், இந்த வைஃபை 7 தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. காரணம், வைஃபை 7 (Wi-Fi 7) ஆனது ஒரு நொடிக்கு 23 ஜிபி (23 Gbps) வரையிலான செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வைஃபை 6 (Wi-Fi 6) தொழில்நுட்பத்தை விட மூன்று மடங்கு அதிக திறனாகும்.

இந்த வேகத்துடன் ஒரு ஸ்மார்ட்போன் செயல்படும் என்றால், கண்டிப்பாக, பயனரின் இன்டர்நெட் வேகம் அதிகரிப்பு அடைவதுடன், தடையற்ற இணைப்பையும் இது உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை பல்வேறு பயன்பாடுகளில் வழங்குவதற்கான உறுதியை இது வழங்குகிறது. குறிப்பாக, ஆன்லைன் கேமிங் (gaming) அனுபவத்தை இவை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளன. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் (streaming) மற்றும் திரைப்படம் மற்றும் OTT ஸ்ட்ரீமிங்கை ஜெட் வேகத்தில் பஃப்பர் (buffer) செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Flagship Smartphones Xiaomi 14 Xiaomi 13 Xiaomi MIX Fold 3 Gets WiFi 7 Upgrade
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X