Xiaomi உனக்கு செம்ம தைரியம்.. Apple, Google, Samsung-க்கு வெடி.. சொந்த Xring O1 சிப் அறிமுகம்.. என்ன ஸ்பெஷல்?
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் 15வது ஆண்டு விழாவில், அதன் முதல் இன்-ஹவுஸ் மொபைல் சிப்செட் (First-ever in-house mobile chipset) ஆன ஸிரிங் ஓ1 (Xring 01) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக ஆப்பிள் (Apple), கூகுள் (Google) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்கள் தங்கள் சொந்த சிப்களை உருவாக்கி வருகின்றன. இதன்மூலம் பெர்பார்மென்ஸ், சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் மற்றும் அவற்றின் ப்ராடெக்ட் ஈகோஸிஸ்டம்களில் அதிக கட்டுப்பாட்டை பெற முயற்சிக்கின்றன.
ஆப்பிளின் கஸ்டம் சிப்கள் ஆனது தொழில்துறை அளவுகோலாக கருதப்படும் மறுகையில் கூகுள் மற்றும் சாம்சங்கின் முயற்சிகள் கலவையான முடிவுகளை / விமர்சனங்களை கண்டு வருகின்றன. இதற்கிடையில் "இந்த கிளப்பில்" ஷாவ்மீ நிறுவனமும் இணைந்துள்ளது. உண்மையிலேயே இந்நிறுவனத்தின் முதல் முயற்சி துணிச்சலானதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஸிரிங் ஓ1 ஆனது மேம்பட்ட 3என்எம் தொழில்நுட்பத்தை (Advanced 3nm technology) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ஸிரிங் ஓ1 அறிமுகம் செய்யப்பட்ட அதே மேடையில் அறிமுகமான ஷாவ்மீ நிறுவனத்தின் 2 புதிய பிளாக்ஷிப் டிவைஸ்களில் பயன்படுத்தப்படும் உள்ளது. ஸிரிங் ஓ1 சிப்செட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்? எந்தெந்த டிவைஸ்களில் ஸிரிங் ஓ1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஸிரிங் ஓ1 சிப், ஆப்பிளின் சிப்களுக்கு பின்னால் உள்ள அதே ஃபவுண்டரியான TSMC ஆல் அதன் இரண்டாம் தலைமுறை 3என்எம் செயல்முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது நல்ல பேட்டரி செயல்திறனுடன் திடமான செயல்திறனை வழங்க வேண்டும். மேலும் ஸிரிங் ஓ1 ஆனது 10-கோர் CPU மற்றும் 16-கோர் Immortalis-G925 GPU-வை கொண்டுள்ளது. அதாவது இப்போதைக்கு இதுதான் மிகவும் சக்திவாய்ந்த மொபைல் சிப்செட்களில் (Most powerful mobile chipset) ஒன்றாகும்.
உயர்மட்ட செயல்திறனை நோக்கமாகக் கொண்டு, வழக்கத்தை விட அதிகமான கோர்களை பயன்படுத்துவதன் மூலம் ஷாவ்மீ ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. இன்னும் எளிமையாக சொன்னால், இது ஹெவியான ஆப்கள் மற்றும் கேம்களை மிகவும் சீராக கையாளும் என்றும், அதே நேரத்தில் பேட்டரி-லைஃப் (Battery Life) திறமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
ஸிரிங் ஓ1 சிப் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்திலேயே, ஷாவ்மீ நிறுவனத்தின் இரண்டு புதிய டிவைஸ்கள் இந்த சிப்பை பயன்படுத்துகின்றன - அது ஷாவ்மீ 15எஸ் ப்ரோ (Xiaomi 15s Pro) ஸ்மார்ட்போன் மற்றும் ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா (Xiaomi Pad 7 Ultra) டேப்லெட். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு டிவைஸ்களும் இப்போதைக்கு சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா உட்பட உலகளாவிய அறிமுகம் நடக்க இன்னும் நாட்கள் ஆகலாம்.
ஷாவ்மீ 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 2கே ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்பிளே
- ஸிரிங் ஓ1 சிப்செட்
- 16GB LPDDR5T ரேம்
- 1TB வரை UFS 4.1 ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா செட்டப்
- பெரிய 6,100mAh பேட்டரி
- 90W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்
-50W வயர்லெஸ் சார்ஜிங்
- IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: 14 இன்ச் டிஸ்பிளே, மெல்லிய பெசல்கள் மற்றும் மெலிதான டிசைனை கொண்டுள்ள இந்த டேப்லெட் ஆப்பிளின் ஐபேட் ப்ரோ மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி டேப் எஸ்10 அல்ட்ரா போன்ற உயர்நிலை டேப்லெட்களுடன் போட்டிபோடும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய 12,000mAh பேட்டரி, 16GB வரை ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கடைசியாக இதுவும் ஸிரிங் ஓ1 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








