Home
News

ஸ்மார்ட் டிவி, போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான நேரம்: சிறப்பு விற்பனையை அறிவித்து அதிரடி காட்டிய Xiaomi.!

சியோமி நிறுவனம் Xiaomi Fan Festival 2023 எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அதாவது இந்நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எம்ஐ.காம் தளத்தில் நடைபெற உள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ், உள்ளிட்ட பல சாதனங்களைத் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதுதவிர குறிப்பிட்ட தயாரிப்புகளை விரும்பி பகிர்வதன் மூலம் கூடுதல் தள்ளுபடிகளையும் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi சிறப்பு விற்பனை: போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான நேரம்

சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.71,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சியோமி 13 ப்ரோ போனின் அசல் விலை ரூ.79,999-ஆக உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9000 விலை குறைக்கப்பட்டு ரூ.71,999-விலையில் விற்பனை செய்யப்பட
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6,499-விலையில் விற்பனை செய்யப்பட்ட ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது இந்த சிறப்பு விற்பனையில் ரூ.5,899-விலையில் வாங்கக் கிடைக்கும். மேலும் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,499-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.7,849-விலையில் வாங்கக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி சிறப்பு விற்பனையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்50 மாடலின் அசல் விலை ரூ.34,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.3500 விலை குறைக்கப்பட்டு ரூ.31,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் ரூ13,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 32-இன்ச் மாடலை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.11,699-விலையில் வாங்க முடியும்.

Xiaomi சிறப்பு விற்பனை: போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான நேரம்

குறிப்பாக சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். பின்பு ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 12 மாடலை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் ரெட்மி ஏ1, ரெட்மி 11 பிரைம் 5ஜி, ரெட்மி நோட் 12 5ஜ சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலை ரூ.1999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி மாடலை ரூ.68,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி நிறுவனத்தின் சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi சிறப்பு விற்பனை: போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான நேரம்

அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சியோமி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Fan Festival 2023 Sale: Incredible Discounts Announced on Smart TV, Phones and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X