இது ஓடாது பறக்கும்.. Xiaomi-ன் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டாப் ஸ்பீட் என்னனு பாருங்க.. விலை ரொம்ப கம்மி..
சியோமி (Xiaomi) நிறுவனம் சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro) என்ற புதிய eBike மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் இதற்கு முன்பு வெளியான சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Xiaomi Electric Scooter) காட்டிலும் பல புதிய மேம்படுத்தல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது. இந்த புதிய சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro) சாதனத்தின் விலை மற்றும் முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro) சாதனம் இப்போது சியோமியின் குளோபல் இணையதள பக்கங்களில் காணப்படுகிறது. இதுசிறந்த பெர்பார்மென்ஸ் (performance), சேஃப்டி (safety) மற்றும் சிறந்த பயனாளர் முறை (best user mode) போன்ற மூன்று விஷயங்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. இந்த புதிய சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென்ன இருக்கிறதென்று பார்க்கலாம் வாங்க.

இது ஓடாது பறக்கும்.. Xiaomi-ன் புது Top Speed எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro) சாதனம் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் (25 km/h) பயணிக்க கூடியது. இதில் 3 ஸ்பீட் மோட்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் வாக்கிங் ஸ்பீட் மோட் (walking speed mode) மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தை (6 km/h) வழங்குகிறது. அடுத்தபடியாக ஸ்டாண்டர்ட் மோடில் (Standard mode) இந்த பைக் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தை (20 km/h) வழங்குகிறது.
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro) பைக்கின் டாப் ஸ்பீட் (Top Speed) மோடாக ஸ்போர்ட் மோட் (Sport mode) செயல்படுகிறது. ஸ்போர்ட் மோடில் இந்த பைக் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் (25 km/h) பயணிக்கிறது. இதன் ரியர் வீல் மோட்டார் (rear wheel motor) 1,000W பீக் பவர் சக்தியை கொண்டுள்ளது. தாழ்வான பகுத்தலில் கூட 22% ஏற்ற சக்தியை இந்த மோட்டார் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ (Xiaomi Electric Scooter 5 Pro):
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிறுவனம் ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (Traction Control System - TCS) அம்சத்தை வழங்கியுள்ளது. இந்த அம்சம் தடுமாற்றத்தை கண்ட்ரோல் செய்து, அருமையான கூடுதல் பேலன்ஸை ஓட்டுனருக்கு வழங்குகிறது. பல விதமான சாலைகளில் இதை பயன்படுத்தும் வகையில் சியோமி இந்த Xiaomi Electric Scooter 5 Pro சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இதன் முன்பக்கத்தில் டூயல் ஸ்ப்ரிங் ஷாக் அப்ஸார்பர் (dual spring shock absorber) வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில், இது சிங்கிள் ஸ்பிரிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த Xiaomi Electric Scooter 5 Pro பைக்கில் சியோமி நிறுவனம் 10 இன்ச் டியூப்லெஸ் டையாரை (10 inch tubeless tyre) வழங்கியுள்ளது. இது கூடுதல் கிரிப் (grip) மற்றும் ஸ்டெபிலிட்டியை (stability) வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மிகவும் மென்மையான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.
சியோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ விலை (Xiaomi Electric Scooter 5 Pro Price):
இந்த சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 ப்ரோ 120 கிலோ வரையிலான எடையை (120 Kg weight) சுமக்க கூடியது. இது போல்டபில் வடிவமைப்புடன் லைட் வெயிட் டிஸைனுடன் வருகிறது. இது 477Wh லித்தியம் பேட்டரி (battery) பவர் உடன் வருகிறது. இது சிங்கிள் சார்ஜில் 60KM தூரம் வரை பயணிக்க (60Km range) கூடியது. இந்த சியோமி ஸ்கூட்டரை நீங்கள் பிரத்தியேகமான சியோமி பைக் ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும்.
இன்னும் பல விதமான அம்சங்களை இந்த Xiaomi Electric Scooter 5 Pro சாதனம் பேக் செய்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த Xiaomi Electric Scooter 5 Pro டிவைஸ் சாதனத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 53,260 என்று சியோமி தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








