தீபாவளி வித் மி.! சியோமி டிவி, மொபைல் மற்றும் பல சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

சியோமி நிறுவனம் தனது அதிகாரபூர்வமான வலைத்தளம் வழியாக தீபாவளி வித் மி எனும் சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. குறிப்பாக மி.காம் வலைத்தளம் சிறப்பு விற்பனையில் ஸமார்ட்போன், டிவி மற்றும் பல்வேறு பொருட்களை விலைகுறைப்பில் வாங்க முடியும். அதேபோல் சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களிலும் கூட சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜபி கிளப்

மேலும் மி விஜபி கிளப் உறுப்பினர்கள் சில பிரத்யேக ஒப்பந்தங்களுக்கான அணுகலையும் கொண்டுள்ளனர் மற்றும் மி.காம் வழியாக இலவச ஷிப்பிங்கையும் பெறுகிறார்கள். இந்த தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்க சியோமி நிறுவனம் ஆக்சிஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.1000 வரையிலான கேஷ்பேக் மற்றும் அனைத்து தயாரிப்புகளின் மீதும் எளிதான இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம்.

தீபாவாளி வித் மி

இப்போது 'தீபாவாளி வித் மி' விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் விலைகுறைப்பு பட்டியலை விரிவாகப் பார்ப்போம். சியோமி மி 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 128ஜிபி கொண்ட மி 10 ஸ்மார்ட்போனை ரூ.44,999-விலையில் வாங்க முடியும். அதபோல் 256ஜிபி மெமரி கொண்ட மி 10 ஸ்மார்ட்போனை ரூ.49,999-விலையில் வாங்க முடியும்.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஜியோவின் சிறந்த திட்டங்கள் இதுதான்!

டைசியாக

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனைத்தை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் ஆனது ரூ.1,000 என்கிற தள்ளுபடியை பெற்று முறையே ரூ.12,999 மற்றும் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். கடைசியாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 9

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

இந்த சிறப்பு விற்பனையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் மாடலும் விற்பனைக்கு வருகிறது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை ரூ.11,499-க்கு வாங்க முடியும். மேலும் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,299-க்கு வாங்க முடியும்.

மி ஸ்மார்ட் பேண்ட் 4 மாடலுக்கு ரூ.400 விலைகுறைப்பு

ஸ்மார்ட்போன்களை தவிர, மி ஸ்மார்ட் பேண்ட் 4 மாடலுக்கு ரூ.400 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மி ஸ்மார்ட் பேண்ட் 4 சாதனத்தை இப்போது வெறும் ரூ.1,899-க்கு வாங்க முடியும்.

அசத்தல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு

சியோமி நிறுவனத்தின் அசத்தல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மி டிவி 4 எக்ஸ் 50 இன்ச் மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் வாங்க முடியும். பின்பு மி டிவி 4 ஏ ப்ரோ 43 இன்ச் மாடலுக்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் வாங்க முடியும்.

பியூரிஃபையர் (ஆர்ஓ + யு.வி)

மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (ஆர்ஓ + யு.வி) ஆனது ரூ.2,000 என்கிற தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல மி டிவி ஸ்டிக் ஆனது ரூ.500 என்கிற தள்ளுபடியையும், மி பாக்ஸ் 4 கே ஆனது ரூ.200 என்கிற தள்ளுபடியையும் பெறும்.

மி ஹோம் செக்யூரிட்டி

இந்த சிறப்பு விற்பனையில் மி ஹோம் செக்யூரிட்டி கேமரா 360 1080p ஆனது ரூ.600 என்கிற தள்ளுபடியுடன் தற்போது ரூ2,299 க்கு வாங்க கிடைக்கிறது.

குறிப்பாக Mi Pay ஐப் பயன்படுத்தி Mi.com இலிருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரையிலான கேஷ்பேக்கை பெறலாம். மேலும் இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, Mi.com ரூ.1 ஃபிளாஷ் விற்பனையையும் நடத்துகிறது, அதில் ஒவ்வொரு நாளும் நிறுவனம் தனது வலைத்தளத்தில் ஒரு புதிய தயாரிப்பை பட்டியலிடும், அதை வெறும் ஒரு ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த ஃபிளாஷ் விற்பனை தினமும் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi ‘Diwali With Mi’ Sale Begins and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X