Home
News

அந்த தங்கத்த தூக்குங்கடா.. மறைமுகமாக Xiaomi வெளியிட்ட ஸ்பெஷல் எடிஷன் Power Bank.. விலை என்ன? எங்கே வாங்கலாம்?

சியோமி (Xiaomi) மூலமாக ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் பவர் பேங்க் (power bank) சாதனம் வெளிவந்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தை சியோமி தனது மறைமுக பிராண்ட் ஆனா குக்டெக் (Cuktech) வழியாக அறிமுகம் செய்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, சட்ட சிக்கல்கள் காரணமாக சியோமி (Xiaomi) நிறுவனம் குக்டெக் (Cuktech) என மறுபெயரிடப்பட்ட பிராண்டை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனம் பிரத்தியேகமாக பவர் ஆக்சஸரீஸ் (power accessories) சாதனங்களை சியோமி உதவியுடன் விற்பனை செய்து வருகிறது. இதில் பவர் பேங்க் (power bank) சாதனம் மற்றும் சார்ஜர் (charger) சாதனங்களும் அடங்கும்.

அந்த தங்கத்த தூக்குங்கடா.. Xiaomi வெளியிட்ட ஸ்பெஷல் எடிஷன் Power Bank

குக்டெக் நிறுவனம் இப்போது குக்டெக் 10 பவர் பேங்க் (Cuktech 10 Power Bank) சாதனம் மற்றும் குக்டெக் அல்ட்ரா-தின் GaN சார்ஜர் (Cuktech Ultra-thin GaN Charger) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் இப்போது புதிய வேரியண்ட் மாடலாக "2024" என்ற எம்போஸ் செய்யப்பட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வடிவமைப்புடன் தங்க நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

குக்டெக் 10 பவர் பேங்க் (Cuktech 10 Power Bank) சாதனம் மற்றும் குக்டெக் அல்ட்ரா-தின் GaN சார்ஜர் (Cuktech Ultra-thin GaN Charger):

இந்த பேட்டரி பேக் (battery pack) இப்போது இந்திய மதிப்பில் ரூ.2900 விலையில் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் சார்ஜர் சாதனம் ரூ.2100 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இவை இரண்டும் இப்போது JD ஆன்லைன் தளம் வழியாக வாங்க கிடைக்கின்றன. இந்த சாதனங்களின் சாதாரண மாடல்களை போல் தான் இதுவும் உள்ளது.

ஆனால், ஸ்பெஷல் எடிஷன் மாடலானது தங்க நிறத்தில் வருகிறது. இதை தவிர இந்த சாதனங்களுக்கு இடையில் வேறு எந்தவித வேறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பவர் பேங்க் சாதனம் 10,000mAh திறனுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பார்ப்பதற்கு ஒரு சாக்லேட் பார் போன்ற வடிவத்தில் 143 x 45 x 33.4mm அளவில், 287g எடையுடன் உள்ளது.

அந்த தங்கத்த தூக்குங்கடா.. Xiaomi வெளியிட்ட ஸ்பெஷல் எடிஷன் Power Bank

LCD கலர் டிஸ்பிளேவுடன் பவர் பேங்க்:

இந்த பவர் பேங்க் சாதனம் TFT LCD கலர் ஸ்க்ரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் பவர் பேங்க் சாதனத்தின் தகவல்கள் தெளிவாக காண்பிக்கப்படுகிறது. குறிப்பாக, இன்னும் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை இது காண்பிக்கிறது. அதேபோல், பவர் பேங்க் வோல்டேஜ், கரண்ட், மற்றும் பிற தகவல்களை காண்பிக்கிறது. இது USB Type-C போர்ட் உடன் 120W அவுட்புட் மற்றும் 90W இன்புட் உடன் வருகிறது.

இதில் USB Type-A போர்ட் அம்சமும் உள்ளது. இரண்டு போர்ட்களும் 150W அவுட்புட் ஆதரவை ஆதரிக்கிறது. இந்த பவர் பேங்க் சாதனம் USB PD என்ற பவர் டென்சிட்டி (Power Delivery 3.0) அம்சத்துடன் வருகிறது. இது QC என்ற Qualcomm Quick Charge அம்சத்துடன் வருகிறது. இதில் FCP மற்றும் UFCS சார்ஜிங் அம்சங்களும் இடம்பெறுகிறது.

குக்டெக் அல்ட்ரா-தின் GaN சார்ஜர் (Cuktech Ultra-thin GaN Charger) போல்டபில் பின் உடன் வருகிறது. இது 65W அவுட்புட் மற்றும் டூயல் USB Type-C போர்டை ஆதரிக்கிறது. இதிலும் பல ஹைடெக் சார்ஜிங் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் இது இப்போது வாங்க கிடைக்கவில்லை என்றாலும், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Cuktech 10 Special Edition Power Bank and Cuktech Ultra-thin GaN Charger Launched In Gold Color
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X