அடேங்கப்பா.! Amazon மற்றும் Flipkart விற்பனையை ஓரங்கட்டும் Mi Diwali Sale.! தேதி இது தான்.!

|

Xiaomi நிறுவனம் அதன் தீபாவளி சிறப்பு Mi விற்பனை குறித்த அறிவிப்பைத் தேதி உடன் இப்போது அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம், இந்தியாவில் ஒரு முன்னணி பிராண்ட்டாக விளங்குகிறது. இது ஒரு சீன நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு Flipkart மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய சிறப்பு விற்பனை பற்றிய விபரங்களை வெளியிட்டு வரும் நேரத்தில், சியோமியும் அதன் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.

Mi Diwali Sale பற்றி வெளியான சுவாரசியமான தகவல்

Mi Diwali Sale பற்றி வெளியான சுவாரசியமான தகவல்

சியோமி ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர் புதிய எலெக்ட்ரோனிக்ஸ் கேட்ஜெட்களை இப்போதைக்கு வாங்காமல், அவர்களுடைய ஷாப்பிங்கை நிறுத்தி, வரவிருக்கும் Mi Diwali Sale விற்பனைக்காகக் காத்திருக்குமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தீபாவளியைக் கோலாகலமான திருவிழாவாக மாற்ற சியோமி முடிவு

இந்த தீபாவளியைக் கோலாகலமான திருவிழாவாக மாற்ற சியோமி முடிவு

இந்தியா வாடிக்கையாளர்களுக்கான வரவிருக்கும் தீபாவளி விற்பனையானது mi.com வழியாக நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில தயாரிப்புகள் உட்பட அதன் அனைத்து தயாரிப்புகள் மீது மாபெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நிறுவனம் வழங்கும் என்பதை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீபாவளி பண்டிகையைக் கோலாகலமான திருவிழாவாக மாற்ற நிறுவனம் ஏராளமான சலுகைகளை அறிவிக்கவிருக்கிறது என்று கூறியுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை எப்போது துவங்குகிறது?

சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை எப்போது துவங்குகிறது?

வரவிருக்கும் விற்பனையின் சலுகை விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், Mi இன் இந்த சிறப்புத் தீபாவளி விற்பனை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று தொடங்கும் என்பதை சியோமி உறுதி செய்துள்ளது. இந்த விற்பனைக்கு முன்னதாக நிறுவனம் புதிய டீஸர்களை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் விற்பனைக்கு முன், Xiaomi அதன் டெக் கா ஷுப் முஹுரத் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களைச் சிறிது காலத்திற்கு எந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறது.

இதற்கு முன் எந்த சாதனத்தையும் வாங்க வேண்டாம்.. ஏன் தெரியுமா?

இதற்கு முன் எந்த சாதனத்தையும் வாங்க வேண்டாம்.. ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் ரசிகர்களின் உண்மையான நண்பரான Xiaomi, இந்த பண்டிகை காலத்தில் சிறந்த தொழில்நுட்ப தயாரிப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் செப் 20 வரை, பொறுத்திருந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு விற்பனை லைவ் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் Xiaomi கூறுகிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

அமேசான் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை எப்போது?

அமேசான் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை எப்போது?

அமேசான் இந்தியாவில் தீபாவளி விற்பனையை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த விற்பனை தொடங்கும் என்பது கவனிக்கத்தக்கது. அமேசான் ஏற்கனவே கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை, வரும் செப்டம்பர் 23 முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீது தள்ளுபடியை வழங்குகிறது. பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 22 அன்று இந்த ஒப்பந்தங்களை முன்கூட்டியே அணுக முடியும்.

எந்த சிறப்பு விற்பனையில் பெஸ்டான சலுகை கிடைக்கும்?

எந்த சிறப்பு விற்பனையில் பெஸ்டான சலுகை கிடைக்கும்?

அதேபோல், Flipkart இன் பிக் பில்லியன் டேஸ் சேல் அடுத்த வாரம் இந்தியாவில் லைவ் செய்யப்படுகிறது. இந்த இரண்டு இரண்டு தளங்களிலும் சியோமி தயாரிப்புகள் மீது தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், தீபாவளியுடன் Mi விற்பனையின் போது mi.com இல் தொழில்நுட்ப கொள்முதல் செய்யும் நுகர்வோருக்கு நிறுவனம் கூடுதல் நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது, எங்கிருந்து, எதை வாங்குவது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Confirms Diwali with Mi Sale Starts From September 20

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X