Home
News

Xiaomi அறிமுகம் செய்த மிக்கி போன்! இது பொம்மை போன் இல்லை ஸ்பெஷல் போன்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சியோமியின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான சியோமி சிவி 3 (Xiaomi Civi 3) சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. இது டிஸ்னியின் 100-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மிக்கி மவுஸ் வடிவமைப்புடன் அறிமுகம் ஸ்பெஷல் எடிஷன் போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்னியின் 100-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், Xiaomi பொழுதுபோக்கு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, சியோமி சிவி 3 இன் ஸ்பெஷல் எடிஷனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரோஸ் பர்பிள், மின்ட் க்ரீன், அட்வென்ச்சர் கோல்டு மற்றும் கோகொனட் க்ரேய் நிறத்தில் வருகிறது. இந்த சாதனத்தின் வெளியீடு ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிராண்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Xiaomi அறிமுகம் செய்த மிக்கி போன்! இது பொம்மை போன் இல்லை ஸ்பெஷல் போன்!

இது வரவிருக்கும் வார இறுதிக்குள் அதன் வெளியீட்டைக் காணலாம் என்று பரிந்துரைக்கிறது. இந்த பிராண்ட் ஸ்மார்ட்போனின் குறிப்பிட்ட வடிவமைப்பு விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீம் யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் இந்த சந்தர்ப்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான தீம் ஜாப் இடம்பெறும் என்பதை சமீபத்திய தகவல்கள் காண்பிக்கிறது.

இந்த புதிய சியோமி சீவி 3 சாதனம் டிஸ்னி கதாபாத்திரமான மிக்கி மவுஸை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்னியின் 100-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், சாதனத்தின் UI வடிவமைப்பு புகழ்பெற்ற டிப்ஸ்டர் காக்பர் ஸ்க்ரிஸ்பெக்கால் வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையில் மிக்கி மவுஸ் என்ற உலக புகழ் பெற்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த போனின் தீம் டிஸ்னி-தீம் என்று அழைக்கப்படுகிறது. இந்த UI தவிர, மீதமுள்ள விவரக்குறிப்புகள் வழக்கமான சிவி 3 மாடலைப் போலவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Xiaomi Civi 3 ஆனது 6.55' இன்ச் கொண்ட OLED கர்வுடு டிஸ்ப்ளேவை கொண்ட ஸ்மார்ட்போன் சாதனமாகும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 240Hz டச் சாம்பிளிங் வீதம் மற்றும் டால்பி விஷன்/HDR10+ சான்றிதழை வழங்குகிறது. இந்த டிஸ்பிளே 12-பிட் வண்ணங்களை ஆதரிக்கிறது.

Xiaomi அறிமுகம் செய்த மிக்கி போன்! இது பொம்மை போன் இல்லை ஸ்பெஷல் போன்!

இது 1920Hz உயர் அதிர்வெண் PWM அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 1500 nits பீக் பிரைட்னஸை ஆதரிக்கிறது. இது தற்போது கிடைக்கக்கூடிய மிகவும் பிரகாசமான டிஸ்பிளேக்களில் ஒன்றாகும். இந்த டிவைஸ் MediaTek Dimensity 8200 அல்ட்ரா சிப் உடன் LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 ஃபிளாஷ் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Xiaomi Civi 3 சாதனம் 4000mm² VC லிக்விட் கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது.

கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 32MP + 32MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உடன் வருகிறது. பின்புறத்தில், இது 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது வெறும் 38 நிமிடங்களில் முழுமையாக ரீசார்ஜ் செய்கிறது.

இந்த சாதனம் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது ஒரு ஸ்பெஷல் எடிஷன் போன் என்பதனால், பெரும்பாலும் இந்திய சந்தையில் அறிமுகமாவதற்கு சிறிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்திய சந்தையில் களமிறங்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 3 Mickey Mouse Club Special Edition Phone Disney 100 Year End Celebration Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X