செல்பி ரசிகர்களே இதோ: 32எம்பி செல்பி கேமரா, 64எம்பி பிரதான கேமரா உடன் சியோமி சிவி 1எஸ்- பல்வேறு செல்பி ஆதரவு!

|

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 32 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சியோமி சிவி 1எஸ்

சியோமி சிவி 1எஸ்

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 32 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியோடு 4500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

32 எம்பி செல்பி கேமரா

32 எம்பி செல்பி கேமரா

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போன் வியாழக் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் செப்டம்பர் 2021-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிவி ஸ்மார்ட்போனின் வரிசையில் வருகிறது. செல்பி விரும்பும் நபர்களை மையமாக வைத்து இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 2எக்ஸ் ஜூம் மற்றும் ஆட்டோஃபோகஸ் போன்ற அம்சங்கள் உடன் 32 எம்பி செல்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. 4டி லைட் சேஸிங் பியூட்டி மற்றும் நேட்டிவ் பியூட்டி போர்ட்ரெய்ட் 2.0 தொழில்நுட்பங்கள் போன்ற பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனானது "மிராக்கிள் சன்ஷைன்" வடிவமைப்பு ஆதரவோடு வருகிறது. இது டைமண்ட் பூச்சு போன்ற தனித்துவமான தோற்றத்தை கொண்டிருக்கிறது.

சியோமி சிவி 1எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சியோமி சிவி 1எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சியோமி சிவி 1எஸ் தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. உலக சந்தையில் அறிமுகம் குறித்த தகவல் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.27,100 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.30,700 ஆக இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.34,200 ஆக இருக்கிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ, இளஞ்சிவப்பு மற்றும் வைட் வண்ண விருப்பங்கள் உடன் வருகிறது.

சியோமி சிவி 1எஸ் சிறப்பம்சங்கள்

சியோமி சிவி 1எஸ் சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் மைக்ரோ- வளைந்த முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 950 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778+ எஸ்ஓசி வசதியோடு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான சியோமி சிவி சாதனத்தை விட 27 சதவீத்ம ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்துகிறது. சியோமி சிவி எஸ் ஆனது வழக்கமான பயன்பாட்டின் போது சுமார் 30 டிகிரி வெப்பநிலையில் செயல்படுவதாக கூறப்படுகிறது.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 32 எம்பி துளை பஞ்ச் கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமரா அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 64 எம்பி பிரதான கேமரா உடன் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எம்ஐயூஐ 13 ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது டால்பி அட்மாஸ் தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவோடு வருகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 1S Smartphone Launched With 32 MP Selfie Camera, 64 Mp Primary Camera: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X