1.1-இன்ச் குட்டி AMOLED ஸ்க்ரீன், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் Xiaomi-யின் புது போன்.. என்ன மாடல்?
பட்ஜெட் மற்றும் லோயர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தும் மறுகையில் சைனீஸ் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது - ஆப்பிள் (Apple) ஐபோன்கள், ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் சாம்சங்கின் (Samsung) பிரீமியம் போன்களுக்கு போட்டியளிக்கும் - பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வரிசையில் - ஷாவ்மீ நிறுவனமானது ஒரு புதிய மேக்ஸ் ப்ரோ மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி வருவது போல் தெரிகிறது. அது ஷாவ்மீ 16 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 16 Pro Max) ஸ்மார்ட்போனாகும்.

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி ஷாவ்மீ நிறுவனம் ஆனது "முழு அளவிலான" ரியர் செகண்டரி டிஸ்பிளே உடனான ஒரு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பிட்ட டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும் கூட, இதன் பேக் பேனலில் உள்ள ஸ்மால் டிஸ்பிளேவானது 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆன ஷாவ்மீ 11 அல்ட்ரா (Xiaomi 11 Ultra) மாடலை நினைவுபடுத்துகிறது. இது பேக் பேனலில் ஒரு சிறிய 1.1-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் (1.1-inch AMOLED Display) வந்தது. ஆக டிப்ஸ்டர் சொல்ல வருவது ஷாவ்மீ 16 ப்ரோ மேக்ஸ் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்!

இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரிசாண்டல் லார்ஜ் மேட்ரிக்ஸ் ஃபுல்-ஸ்க்ரீன் டெக்கோ (Horizontal large matrix full-size sub-screen DECO) டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில்வெர்டிகல் ஹோல்-பஞ்ச் லேஅவுட்டை கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஷாவ்மீ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் இடம்பெறும் ஸ்மால் ஸ்க்ரீன் ஆனது "வழக்கம் போல" குவிக் மெசேஜ் ப்ரிவ்யூ, ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே செயல்பாடுகள் மற்றும் ஒரு செல்பீ மானிட்டராக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுதவிர்த்து ஷாவ்மீ 16 ப்ரோ மேக்ஸ் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் இல்லை.

முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா-வால் டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- விலை ரூ.1,09,999 (16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்)


Click it and Unblock the Notifications








