ஒன்னு இல்ல ரெண்டு இருக்கு: ஒல்லியான தேகம் வலுவான அம்சத்தோடு Xiaomi Book Pro 2022!

|

சியோமி நிறுவனம் சியோமி புக் ப்ரோ 2022 லேப்டாப்பை இன்டெல் செயலி ஆதரவோடு அறிமுகம் செய்துள்ளது. Xiaomi Book Pro 2022 தொடர் OLED பேனல்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Xiaomi வெளியீட்டு நிகழ்வில் பல சியோமி சாதனங்கள் வெளியிடப்பட்டது அதில் ஒன்று Xiaomi Book Pro 2022 ஆகும். நேற்றைய நிகழ்வில் அறிமுகமான பெரும்பலான சாதனங்கள் ப்ரீமியம் விலை தான். சரி, இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

14-இன்ச் மற்றும் 16-இன்ச் மாடல்கள் அறிமுகம்

14-இன்ச் மற்றும் 16-இன்ச் மாடல்கள் அறிமுகம்

Xiaomi Book Pro 2022 ஆனது 14-இன்ச் மற்றும் 16-இன்ச் என இரண்டு அளவுகளில் வெளியாகி இருக்கிறது. சியோமி புக் ப்ரோ 2022 சீரிஸ் லேப்டாப்கள் ஆனது சியோமி பிரத்யேகமாக உருவாக்கிய 3D LUT கலர் கரெக்சன் ஆதரவோடு கூடிய E4 OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தால் விலையும் அப்படி தானே இருக்கும். ஆம், இதன் விலை அதிகமாகும்.

விலை சற்று அதிகம் தான், எவ்வளவு தெரியுமா?

விலை சற்று அதிகம் தான், எவ்வளவு தெரியுமா?

சியோமி வழங்கும் புக் ப்ரோ 14-இன்ச் 2022 லேப்டாப் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்று i5 பதிப்பு மற்றொன்று i7 பதிப்பாகும். இதன் i5 பதிப்பு விலை CNY 6799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.80,000 ஆகும். அதேபோல் i7 பதிப்பு விலை CNY 8499 ஆகும். இதன் இந்திய விலை ரூ.1,00,000. அதேபோல் Xiaomi Book Pro 2022 இன் 16 இன்ச் மாடலும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் i5 பதிப்பு விலை CNY 7399 ஆகும். இந்திய விலை தோராயமாக ரூ.87,000. அதேபோல் இந்த மாடலின் i7 வேரியண்ட் CNY 9399 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.1,10,700 ஆக இருக்கிறது.

Xiaomi Book Pro 2022 சிறப்பம்சங்கள் என்ன?

Xiaomi Book Pro 2022 சிறப்பம்சங்கள் என்ன?

Xiaomi Book Pro 2022 சீரிஸ் இல் இருக்கும் 16 இன்ச், 14 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களும் காட்சி அளவு, லேப்டாப் பரிமாணங்களை தவிர பிற அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் சியோமி உருவாக்கிய 3D LUT வண்ண கரெக்சன் ஆதரவோடு கூடிய E4 OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் 14 இன்ச் டிஸ்ப்ளே அம்சமானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் டால்பி விஷன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவை கொண்டிருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவு மூலம் இந்த லேப்டாப் இயக்கப்படுகிறது. அதேபோல் 16 இன்ச் மாடல் 60 ஹெர்ட்ஸ் பேனலுடன் அதே அம்சங்களை கொண்டிருக்கிறது.

ரேம் பவரும் அதிகம், பிரகாச நிலையும் அதிகம்

ரேம் பவரும் அதிகம், பிரகாச நிலையும் அதிகம்

லேப்டாப்கள் டிஸ்ப்ளே ஆனது 600 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. சியோமி புக் ப்ரோ 2022 ஆனது 12-வது ஜென் Intel Core P தொடர் SoC மூலம் இயக்கப்படுகிறது. 16GB ரேம் உடன் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இருக்கிறது. Xiaomi Book Pro 2022 லேப்டாப்கள் உடன் 100W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய GaN அடாப்டர் வழங்கப்படுகிறது.

நிகழ்வில் அறிமுகமான சியோமி 12 எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

நிகழ்வில் அறிமுகமான சியோமி 12 எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்த வெளியீட்டு நிகழ்வில் Xiaomi 12S சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டது. Xiaomi 12S தொடரில் சியோமி 12 எஸ், சியோமி 12 எஸ் ப்ரோ, சியோமி 12 எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ப்ரீமியம் மாடலாக Xiaomi 12S Ultra இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50MP Sony IMX989 கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வெளியாகி இருக்கிறது.

ப்ரீமியம் மாடலுக்கான அனைத்து அம்சமும் இருக்கு

ப்ரீமியம் மாடலுக்கான அனைத்து அம்சமும் இருக்கு

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.70,739 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.82,539 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Book Pro 2022 Launched With Intel Processors and OLED Panels: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X