சியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்: ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை அனைத்திற்கும் சிறப்பு சலுகை!

|

சியோமி நிறுவனம் தனது பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை அறிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்த பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை நாளை முதல் துவங்கி டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்

பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்

சியோமி நிறுவனத்தின் இந்த பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனையில் பல புதிய ரெட்மி மற்றும் சியோமி மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமியின் இதர கேட்ஜெட்கள் மற்றும் சியோமி மி எக்கோஸிஸ்டெம் தயாரிப்புகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி டிவி 4X 55 டிவி

சியோமி டிவி 4X 55 டிவி

சியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை நவம்பர் 29ம் தேதி மதியம் 12 முதல் துவங்குகிறது. இந்த சிறப்பு பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை வருகிற டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஸியோமியின் புதிய அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 8, சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் சியோமி டிவி 4X 55 2020 எடிஷனும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி K20 / ரெட்மி K20 ப்ரோ

சியோமி ரெட்மி K20 / ரெட்மி K20 ப்ரோ

 • சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.19,999 என்ற விலையிலும், 6ஜிபி/128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.22,999 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
 • சியோமி ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி/128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.25,999 என்ற விலையிலும், 8ஜிபி/256ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.28,999என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
 • ரெட்மி நோட் 7 ப்ரோ

  ரெட்மி நோட் 7 ப்ரோ

  சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 வரை பிரைஸ் கட் செய்யப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி/64ஜிபி மற்றும் 6ஜிபி/64ஜிபி வேரியண்ட் போன்கள் வெறும் ரூ.11,999 என்ற விலையிலும், 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.12,999 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

  சியோமி மி A3

  சியோமி மி A3

  சியோமி நிறுவனத்திலிருந்து விற்பனைக்கு வரும் ஒரே ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சியோமி மி A3 மட்டுமே. சியோமி மி A3 இன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.12,499 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது, அதே நேரத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.15,499 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.

  சியோமி மி எக்கோஸிஸ்டெம் ஆக்சஸரீஸ்

  சியோமி மி எக்கோஸிஸ்டெம் ஆக்சஸரீஸ்

  • சியோமி மி பேண்ட் 3 சாதனத்திற்கு ரூ.200 சலுகையுடன் வெறும் ரூ.1599 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • சியோமி மி எல்.இ.டி பல்புகளுக்கு ரூ.300 சலுகையுடன் வெறும் ரூ.999 என்ற விலையிலும், ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனைக்கு ரூ.699 என்ற விலையிலும் கிடைக்கும்.
  • சியோமி மி ஹோம் செக்யூரிட்டி கேமரா ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.1,299 க்கு விற்கப்படும். ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையில் ரூ.999 க்கு கிடைக்கும்.
  • சியோமி மி புளூடூத் ஸ்பீக்கர் 2, ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.1,299 க்கு விற்கப்படும். ஃபிளாஷ் விற்பனையில் ரூ.999 க்கு கிடைக்கும்.
  • சியோமி ரெட்மி நோட் 8 / ரெட்மி நோட் 8 ப்ரோ

   சியோமி ரெட்மி நோட் 8 / ரெட்மி நோட் 8 ப்ரோ

   • சியோமி ரெட்மி நோட் 8 இன் புதிய காஸ்மிக் பர்பிள் நிற 4ஜிபி/64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.9,999 மட்டுமே.
   • சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோவின் புதிய எலக்ட்ரிக் ப்ளூ நிற வேரியண்ட் வெறும் ரூ.14,999 மட்டுமே.

Best Mobiles in India

English summary
Xiaomi Black Friday Deals Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro, Mi A3, Mi Band 3 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X