ஐபோனுக்கு முன்னாடி இந்த Redmi 11 Prime 4G மற்றும் 5G அறிமுகமாகிறது.! உங்க காலண்டரில் குறிச்சுக்கோங்க.!

|

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iPhone 14 சீரிஸ் மாடல்களை வரும் செப்டெம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதனால், மற்ற முன்னணி பிராண்ட்கள் அவர்களுடைய புதிய தயாரிப்புகளை ஐபோனின் அறிமுகத்திற்கு முன்பாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்த பட்டியலில் Redmi நிறுவனமும் ஒன்றாக மாறியுள்ளது. காரணம், இன்னும் சில தினங்களில் ரெட்மி தனது புதிய Redmi 11 Prime சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த தேதியை உங்கள் காலெண்டரில் குறிச்சு வச்சுக்கோங்க

இந்த தேதியை உங்கள் காலெண்டரில் குறிச்சு வச்சுக்கோங்க

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi இன் துணை பிராண்ட்டான Redmi இப்போது இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியச் சந்தையில் Redmi 11 Prime என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போன் ஒரு பட்ஜெட் செக்மென்ட் மாடலாக வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சியோமி அறிவித்துள்ளது.

Redmi 11 Prime சாதனம் பற்றி வெளியான தகவல் என்ன சொல்கிறது?

Redmi 11 Prime சாதனம் பற்றி வெளியான தகவல் என்ன சொல்கிறது?

இந்த புதிய Redmi 11 Prime ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த டிவைஸ் பற்றிய முக்கியமான அம்சங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்த Redmi 11 Prime சாதனம் அமேசான் தளம் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்பதனால், இந்த டிவைஸ் பற்றிய விபரங்கள் அமேசான் மைக்ரோசைடில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

அடடே இப்படி ஒரு ஸ்பெஷல் ஆன சிப்செட்-ஆ?

அடடே இப்படி ஒரு ஸ்பெஷல் ஆன சிப்செட்-ஆ?

இதன் படி, வரவிருக்கும் புதிய Redmi 11 Prime ஸ்மார்ட்போன் என்ன முக்கியமான அம்சங்களுடன் இந்தியச் சந்தையில் களமிறங்கும் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய MediaTek Helio G99 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட், MediaTek வரிசையில் வெளியான சமீபத்திய 4ஜி இணைப்பை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில்  புதிய ரெட்மி 11 பிரைம் அறிமுகமா?

பட்ஜெட் விலையில் புதிய ரெட்மி 11 பிரைம் அறிமுகமா?

குறிப்பாக, இந்த MediaTek Helio G99 சிப்செட் ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸை அதிகரிப்பதோடு, அதன் கேமிங் அனுபவத்தையும் மேம்படுத்த இந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இதில் உள்ள சிப்செட் மக்களை ஈர்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!

பட்ஜெட் விலையில் 50MP ட்ரிபிள் ரியர் கேமரா

பட்ஜெட் விலையில் 50MP ட்ரிபிள் ரியர் கேமரா

இந்த வரவிருக்கும் புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் 50MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டிவைஸ் டியர் டிராப் நாட்ச் கொண்ட செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று அமேசான் விபரம் குறிப்பிடுகிறது. அதேபோல், இந்த புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் 5000mah பேட்டரியை பேக் செய்யுமென்று அறிவித்துள்ளது.

புதிய ரெட்மி 11 பிரைம் விலை என்ன?

புதிய ரெட்மி 11 பிரைம் விலை என்ன?

இந்த புதிய ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, ரெட்மி வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்த பிரைம் 4ஜி மாடலுடன் சேர்த்து, ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலை MediaTek Dimensity 700 சிப்செட் உடன் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Announces Redmi 11 Prime 4G and 5G Budget Models Launch Date As September 6 For India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X