மி எக்ஸ்சேன்ஜ்: பழைய கருவியை தள்ளுபடி விலையில் மாற்றுவது எப்படி.?
இந்த திட்டத்தின் கீழ், சியோமி பயனர்கள் ஒரு பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய சியோமி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
நேற்று நடைபெற்ற சியோமி மி பவர் பேங்க் 2ஐ வெளியீட்டு நிகழ்வில் இரு சுவாரசியமான திட்டமொன்றை சியோமி நிறுவனம் அதன் இந்திய பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

"மேட் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உருவாக்கம் பெற்ற மி பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் வெளியீட்டுடன், நிறுவனத்தின் மி எக்ஸ்சேன்ஜ் ப்ரோகிராம்ட திட்டமும் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சியோமி பயனர்கள் ஒரு பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய சியோமி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ஸ்மார்ட்போனின் நிலைமையை பொறுத்து
இந்த எக்ஸ்சேன்ஜை மி ஹோமில் நிகழ்த்திக்கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் அளிக்கும் ஸ்மார்ட்போனின் நிலைமையை பொறுத்து, மீ ஸ்டோரில் பணியாளர் குழு உங்களுடைய சாதனத்திற்கான பொருத்தமான விலையை முன்மொழிவார்கள்.

ஒரு கேஷிஃபை போர்பொலியோ மூலமாக
சாதனத்தின் செலவு சந்தை நிலைமைகளின் அடிப்படையின்கீழ் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் நீங்கள் தள்ளுபடியை பெறலாம். இந்த எக்ஸ்சேன்ஜ் திட்டத்தின் கீழ், ஒரு சியோமி வாடிக்கையாளர் ஆனவர் ஒரு கேஷிஃபை போர்பொலியோ மூலமாக ஒரு சாதனத்தை மட்டுமே எக்ஸ்சேன்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுவிற்பனை மதிப்பு முன்மொழியப்படும்
மேலும் இன்பில்ட் அப்ளிகேஷனான கேஷிஃபையின் அடிப்படையில் தான் மறுவிற்பனை மதிப்பு முன்மொழியப்படும், அந்த விலையே இறுதியானது என்பதும், பரிமாற்றத்திற்குப் பிறகு கிடைக்கும் ஒரு ஈ-ரசீது கொண்டு தள்ளுபடியை செய்யப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய சாதனத்தை எடுத்து செல்ல வேண்டும்
எக்ஸ்சேன்ஜ் நிகழ்த்தும்போது வாடிக்கையாளர்களை தங்கள் பழைய சாதனத்தை எடுத்து செல்ல வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் கட்டாயமாகும். ஒருவேளை புதிய தொலைபேசிக்கான ஒரு முழுமையான தொகையை செலுத்தியிருந்தாலும் கூட, நிர்வாகத்தின் மூலம் சேகரித்தல் பணி நடக்கும் போது, உங்களுக்கான தள்ளுபடி தொகை கிடைக்கும்.

மொத்தம் 11 மி ஹோம் ஸ்டோர்கள்
தில்லி, என்.சி.ஆர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே மற்றும் சென்னை போன்ற இடங்களில் தற்போது மொத்தம் 11 மி ஹோம் ஸ்டோர்கள் உள்ளது. மேலும் சியோமி நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் சுமார் 100 மி ஹோம் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications