தூக்கி சொல்லு- ரூ.11,000 வரை தள்ளுபடி- குடியரசு தினத்தை கொண்டாடும் சியோமி: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

|

சியோமி ஸ்மார்ட்போன்கள் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் மிகவும் பிரபலமான சாதனங்களாக இருக்கிறது. சியோமி ஸ்மார்ட்போன் பல்வேறு விலைப் புள்ளிகளில் சிறந்த ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகின்றன. சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் பிரதான ஒன்று என்றே கூறலாம். இந்தியாவில் சாதனங்களை விற்பதற்கு என சியோமி சொந்த தளத்தையே வைத்து சலுகைகளை வழங்கி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் சியோமி தனது சொந்த இணையதளம் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. குடியரசு தின தள்ளுபடியை சியோமி அறிவித்திருக்கிறது.

சியோமி அறிவித்த குடியரசு தின விற்பனை

சியோமி அறிவித்த குடியரசு தின விற்பனை

சியோமி அறிவித்த குடியரசு தின விற்பனை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. நீங்கள் ரெட்மி மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகளை அறிவித்துள்ளது. சியோமி குடியரசு தின விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

சியோமி 11டி ப்ரோ 5ஜி

சியோமி 11டி ப்ரோ 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.43,999

அசல் விலை: ரூ 54,999

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது சியோமி சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ரீமியம் ரக சாதனமாகும். குடியரசு தின விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,999 என்ற விலையில் இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.43,999 என விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை ரூ.11,000 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

சியோமி 11ஐ 5ஜி

சியோமி 11ஐ 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.26,999

அசல் விலை: ரூ 31,999

சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சியோமி குடியரசு தின விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.31,999 என விற்கப்பட்ட நிலையில் இந்த சாதனம் ரூ.26,999 என வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.5000 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

சியோமி 11 லைட் என்இ 5ஜி

சியோமி 11 லைட் என்இ 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.28,999

அசல் விலை: ரூ 33,999

சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரூ.33,999 என்ற விலையில் கிடைத்த இந்த சாதனம் தற்போது ரூ.28,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.5000 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.36,999

அசல் விலை: ரூ 47,999

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.47,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.36,999 என கிடைக்கிறது. தள்ளுபடி தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.11,000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

எம்ஐ 11 எக்ஸ் 5ஜி

எம்ஐ 11 எக்ஸ் 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.29,999

அசல் விலை: ரூ 34,999

எம்ஐ 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.34,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.29,999 என கிடைக்கிறது. தள்ளுபடி தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.5,000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

தள்ளுபடி விலை: ரூ.18,999

அசல் விலை: ரூ 22,999

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.22,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.18,999 என கிடைக்கிறது. தள்ளுபடி தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.4,000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

தள்ளுபடி விலை: ரூ.16,999

அசல் விலை: ரூ 20,999

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.20,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.16,999 என கிடைக்கிறது. தள்ளுபடி தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.4,000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

ரெட்மி நோட் 10 பிரைம்

ரெட்மி நோட் 10 பிரைம்

தள்ளுபடி விலை: ரூ.14,499

அசல் விலை: ரூ 16,999

ரெட்மி நோட் 10 பிரைம் ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது ஆஸ்ட்ரல் ஒயிட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. சியோமி குடியரசு தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,499 என கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Announced Republic Day Offer With Huge Discount For its Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X