அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் ரெட்மி 10சி!
புதிய சியோமி ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது 6.71 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனிந் கூடுதல் விவரக்குறிப்பு விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது எச்டி ப்ளஸ் அல்லது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 13 உடனான ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறது. சியோமி ரெட்மி 10சி மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி10சி ஸ்மார்ட்போன்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது சமீபத்திய சாதனமாக சியோமி ரெட்மி10சி ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி ரெட்மி 10சி ஆனது ரெட்மி 10 தொடர் போர்ட்ஃபோலியோவில் இணையும் சமீபத்திய சாதனமாக இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போனுக்கு அடுத்ததாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது இடைநிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் இது குவால்காம் செயலி மற்றும் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிந் பின்புறத்தில் ஸ்குவாரிஷ் கேமரா மாட்யூல் உடன் கூடிய டெக்ஸ்சர்டு ஷெல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இரட்டை கேமரா அமைப்போடு மட்டுமின்றி பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை ஸ்கேனர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி 10சி சிறப்பம்சங்கள்
புதிய சியோமி ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் 6.71 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது எச்டி ப்ளஸ் அல்லது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 13 உடனான ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் இயங்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் வசதியோடு 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் மெமரி விரிவாக்க வசதிக்கு இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா
ஸ்மார்ட்போனின் கேமரா குறிப்புகள் குறித்து பார்க்கையில், ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது 5 எம்பி செல்பி கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி
சியோமி ரெட்மி 10சி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், சியோமி ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது நைஜீரியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு என்ஜிஎன் 78,000 என விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.14,388 ஆகும். அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை என்ஜிஎன் 87000 ஆக விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.16,000 ஆகும். இந்த சாதனம் பிளாக், ப்ளூ மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications