Home
News

சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண நேரம் வந்துடுச்சு! டிவி, போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த Xiaomi.!

சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் பட்ஜெட் விலையில் தனித்துவமான சாதனங்களை அறிமுகம் செய்கிறது இந்நிறுவனம். எனவேதான் மற்ற நிறுவனங்களின் சாதனங்களை விட சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் Xiaomi ninth anniversary sale எனும் சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனை ஜூலை 6 முதல் ஜூலை 10-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ் எனப் பல்வேறு சாதனங்களை சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்க முடியும்.

Xiaomi anniversary sale: டிவி, போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த Xiaomi.!

அதேபோல் சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும். பின்பு இந்த சிறப்பு விற்பனை எம்.காம் மற்றும் சியோமி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விலைகுறைப்பட்ட சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி அறிவித்துள்ளது சிறப்பு விற்பனையில் 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவியை ரூ.9,749-விலையில் வாங்க முடியும். இந்த டிவி 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஃபையர் ஓஎஸ் 7, ப்ளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை, ஏர்பிளே மற்றும் மிராகாஸ்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட், 1ஜிபி ரேம், 32ஜிபி ஸடோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Xiaomi anniversary sale: டிவி, போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த Xiaomi.!

அதேபோல் மிகவும் பிரபலமான 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.11,249-விலையில் வாங்க முடியும். பின்பு 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல் ஆனது ரூ.20,௯௯௯ விலையிலும், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலை ரூ.22,499-விலையிலும் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

குறிப்பாக 50-இன்ச் கொண்ட சியோமி டிவி எகஸ்50 மாடல் ஆனது ரூ.30,999-விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான ரெட்மி மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சலுகைகளை இப்போது பார்ப்போம்.

சியோமி நிறுவனத்தின் சிறப்பு விற்பனையில் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையில் வாங்க முடியும். பின்பு ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தரமான ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,499-க்கு வாங்க கிடைக்கிறது.

Xiaomi anniversary sale: டிவி, போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த Xiaomi.!

ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.18,999-க்கு வாங்க முடியும். மேலும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.25,999-விலையிலும், சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.39,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் ரெட்மி 11 ப்ரைம் 5ஜி ஸ்மார்ட்போனை இந்த சியோமி சிறப்பு விற்பனையில் ரூ.11,999-க்கு வாங்க முடியும். இந்த போன்களை தவிர இன்னும் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் சிறப்பு விற்பனையில் ரெட்மி பேட் மாடலை ரூ.13,749-விலையில் வாங்க முடியும். பின்பு ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் ஆனது ரூ.1299-விலையில் வாங்க கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு லேப்டாப், இயர்பட்ஸ், டேப்லெட் மாடல்களுக்கு இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi anniversary sale: 75 percent off on TVs, smartphones! Check offers Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X