Xiaomi, OnePlus போன்களுக்கு மட்டுமே கிடைக்கும் புது ஆப்ஸ்.. இனி ஹாலிவுட் ரேஞ்சில் வீடியோ எடுக்கலாம்..
இதுவரை எந்தவொரு ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல்களுக்கும் கிடைக்காத மிக பிரத்தியேகமான மொபைல் ஆப்ஸ் (Mobile Apps) தற்போது சியோமி மாடல் ஸ்மார்ட்போன்கள் (Xiaomi smartphones) மற்றும் ஒன்பிளஸ் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு (OnePlus smartphones) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களை (Hollywood movies) படம்பிடிக்க உதவும் பிளாக்மேஜிக் கேமராவின் (Blackmagic camera) பிரத்தியேகமான புதிய மொபைல் ஆப்ஸ் தற்போது ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இதை எப்படி இன்ஸ்டால் செய்வது? இதை எப்படி பயன்படுத்துவது? மற்றும் இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறதென்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பிளாக்மேஜிக் டிசைன் நிறுவனம் சமீபத்தில் பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் என்ற ஒரு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் அப்படியே பிளாக்மேஜிக் கேமராவில் பயன்படுத்தப்படும் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஆனால், பிளாக்மேஜிக் கேமெராவிற்கு பதிலாக இது உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை பிளாக்மேஜிக் கேமரா போன்று மாற்றி இயக்குகிறது.

இனி ஹாலிவுட் ரேஞ்சில் ஆண்ட்ராய்டு போனில் வீடியோ எடுக்கலாம்.. பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ்:
பல முன்னணி ஹாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் பிளாக்மேஜிக் டிசைன் கேமரா மூலம் தான் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமரா பல வகையான தொழில்முறை கருவிகளை கொண்டுள்ளது. இந்த தொழில்முறை கருவிகளுடன் இனி உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை ஹாலிவுட் ரேஞ்சில் உங்களால் இயக்க கூடிய விருப்பங்களை தற்போது இந்த புதிய பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் வழங்குகிறது.
இதில் பிளாக்மேஜிக் கிளவுட் ஆதரவு மற்றும் உலகளவில் பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் பயன்படுத்தும் எடிட்டர்ஸ் மற்றும் கலரிஸ்ட்கள் உடன் இணையும் வாய்ப்பையும் இந்த பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் உருவாக்கி தருகிறது. இந்த பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ் இதற்கு முன்பு, சாம்சங் கேலக்ஸி S23, S23 Plus, S23 Ultra மற்றும் S24, S24 Plus, S24 Ultra போன்ற சாம்சங் (Samsung) மாடல்களில் கிடைத்தது.
அதேபோல், Google Pixel 7, 7a, 7 Pro, 8 மற்றும் 8 Pro போன்ற போன்களிலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, இந்த ஆப்ஸ் சியோமி (Xiaomi) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) பயனர்களுக்கும் கிடைக்கிறது. இன்று, பிளாக்மேஜிக் டிசைன் ஆண்ட்ராய்டுக்கான பிளாக்மேஜிக் கேமரா 1.1 பதிப்பு புதுப்பிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Xiaomi, OnePlus போன்களுக்கு மட்டுமே கிடைக்கும் புது Blackmagic Camera Apps:
இப்போது Xiaomi 13, Xiaomi 14, OnePlus 11, OnePlus 12, Samsung Galaxy S21 மற்றும் S22, Google Pixel 6, 6 Pro மற்றும் 6a உள்ளிட்ட பல சாதனங்கள் பயன்பாட்டை ஆதரிக்கும். இந்த புதிய பதிப்பானது, பயனர்கள் தாங்கள் படமெடுப்பதை ஒரு பெரிய டிஸ்பிளேவில் பார்க்க அனுமதிக்கும். இது கவனம் மற்றும் வெளிப்பாட்டைத் துல்லியமாக சரிசெய்ய உதவும். இது பல மானிட்டர்களுடன் இணைக்கப்படலாம், இதனால் தொகுப்பில் உள்ள அனைவரும் பதிவைப் பார்க்க முடியும்.
இந்த ஆப்ஸ் கேமராவில் ஃபாலோ ஃபோகஸ் கன்ட்ரோலைச் சேர்க்கிறது. இதனால் பயனர்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பின் போது லென்ஸின் ஃபோகஸ் பாயிண்டை மாற்ற முடியும். இது படிப்படியாக முன்புறம் அல்லது பின்னணியில் 3 முன்னமைக்கப்பட்ட ஃபோகஸ் புள்ளிகளுக்கு இடையில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இதனால், படத்தின் பல்வேறு கூறுகளுக்கு பார்வையாளரின் கவனத்தை ஈர்க்க இது உதவும்.
உங்களிடம் சியோமி அல்லது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறதென்றால், இந்த ஆப்ஸை ட்ரை செய்து பாருங்கள். குறிப்பாக, இந்த புதிய பிளாக்மேஜிக் கேமரா ஆப்ஸ், இன்ஸ்டாகிராம் ரீலிஸ், யூடியூப் வீடியோ ரெக்கார்டிங், பிளாக்கிங் செய்யும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








