Home
News

இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜீலை 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இரு மாடல்களுக்கும் பிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில்

பிளிப்கார்ட் தளத்தில்

பிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் முன்னதாகவே அவற்றை வாங்க முன்பதிவு செய்யலாம், குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் ஜீலை 12-ம் தேதி மதியம் 12மணிக்கு ரூ.855 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். பின்பு போன் அறிமுகமானதும் அதற்கான தொகையைச் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

 ஆல்ஃபா சேல் கட்டணம்

ஆல்ஃபா சேல் கட்டணம்

குறிப்பாக ஆல்ஃபா சேல் கட்டணம் பயன்படுத்தப்படாமல் போகும் பட்சத்தில் அந்த தொகை பயனர்களின் மி அக்கவுண்ட்டில் சேர்க்கப்பட்டு விடும். பிளிப்கார்ட் பயனர்கள் இதனை பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கப் பயன்படுத்த முடியும். மேலும் இப்போது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே20 ப்ரோ டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்

இக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

ரெட்மி கே20 ப்ரோ சேமிப்பு:

ரெட்மி கே20 ப்ரோ சேமிப்பு:

டூயல் சிம் ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,
பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

20எம்பி செல்பீ கேமரா

20எம்பி செல்பீ கேமரா

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி
போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Alpha Sale: Redmi K20, Redmi K20 Pro pre-booking to start July 12 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X