ரூ.4/-க்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனை செய்ய சியோமி முடிவு.!

இன்று மாலை 4 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதேபோன்று நாளை மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிகளிலும் ரூ.4ஃபிளாஷ் விற்பனை நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் 4-ம் ஆண்டு விழா இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது, இதில் பல்வேறு சியோமி சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சியோமி சிறப்பு விற்பனை 3நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.4/-க்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனை செய்ய சியோமி முடிவு.!

குறிப்பாக பல்வேறு சலுகைகள் மட்டுமின்றி ரூ.4 விலையில் ஃபிளாஷ் விறப்பனை நடைபெற இருக்கிறது, அதன்படி மி எல்இடி டிவி 4 (55-இன்ச்),ரெட்மி வைய்2, ரெட்மி நோட் 5 ப்ரோ, மி பேன்ட் 2, போன்ற சாதனங்களை பயனர்கள் ரூ. விலையில் வாங்க முடியும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

சியோமி நிறுவனம்:

சியோமி நிறுவனம்:

சியோமி நிறுவனம் இந்த சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்றவற்றை ஸ்டேட் பேங்க், மொபிவிக் போன்றவற்றுடன் இணைந்து
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதன்படி ரூ.7500 வரை பொருட்கள் வாங்கும் ஸ்டேட் பயனர்கள் ரூ.500 வரை தள்ளுபடி பெற
முடியும்.

பேடிஎம்:

பேடிஎம்:

பேடிஎம் பயன்படுத்தி ரூ.8,999 வரை சியோமி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர் ரூ.500 வரை கேஷ்பேக் பெறமுடியும், பின்பு
மொபிவிக் மூலம் பணத்தை செலுத்தினால் 25சதவீதம் தள்ளுபடி பெற முடியும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நேரம்:

ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நேரம்:

இன்று மாலை 4 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதேபோன்று நாளை மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிகளிலும் ரூ.4
ஃபிளாஷ் விற்பனை நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மி டிவி மாடல்கள், ஸ்மார்ட்போன்கள், பேன்ட் போன்ற சாதனங்களை ரூ.4 விலையில் வாங்க முடியும்.

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.29,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில்
வாங்க முடியும். அதேபோன்று மி மேக்ஸ் 2 சாதனத்தின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.14,999-விலையில் விற்பனை செய்ய முடியும்.

மி பிளாக்பஸ்டர் விற்பனை:

மி பிளாக்பஸ்டர் விற்பனை:

இன்று சியோமி பிளாக்பஸ்டர் சிறப்பு விற்பனையில் ரெட்மீ நோட் 5 ப்ரோ, மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32இன்ச, 43இன்ச், 55இன்ச்), போன்ற
சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மதியம் 12மணி முதல் இந்த விற்பனை துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மேக்ஸ் 3:

சியோமி மி மேக்ஸ் 3:

சியோமி நிறுவனம் விரைவில் சியோமி மி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை சென்சார் மற்றும் டூயல் கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டிஸ்பிளே :

டிஸ்பிளே :

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளா பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்710 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில்
இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ
கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

எம்ஐயூஐ ரேம் கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்கள்

எம்ஐயூஐ ரேம் கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்கள்

இந்தக் கட்டுரையில் எம்ஐயூஐ-யை கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்களைக் குறித்தும், அதன்மூலம் ஒரு பயனருக்கு கிடைக்கும் விருப்பத் தேர்வுகளைக் குறித்தும் காண்போம்.

சியாமி எம்ஐ 8 / எம்ஐ 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு

சியாமி எம்ஐ 8 / எம்ஐ 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு

முக்கிய அம்சங்கள்


6.21-இன்ச் (2248 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:7:9 அல்மோல்டு டிஸ்ப்ளே
2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 630 ஜிபியூ
6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம்
8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம்
ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9, எம்ஐயூஐ 10க்கு மேம்படுத்தி கொள்ளலாம்
இரட்டை சிம் (நானே + நானே)
12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 12எம்பி பின்பக்க கேமரா
20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் ரியல்-டைம் ஏஐ போர்ட்ரெய்ட்ஸ்
இரட்டை 4ஜி வோல்டி
3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 4+ விரைவு சார்ஜிங் (மீ 8) / 3000எம்ஏஹெச் (வழக்கமானது) / 2900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சியாமி எம்ஐ 8 எஸ்இ

சியாமி எம்ஐ 8 எஸ்இ

முக்கிய அம்சங்கள்


5.88-இன்ச் (2244×1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18.7:9 அமோல்டு 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 616 ஜிபியூ
4ஜிபி / 6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம், 64ஜிபி (இஎம்எம்சி 5.1) உள்ளக நினைவகம்
ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9, எம்ஐயூஐ 10-க்கு மேம்படுத்தி கொள்ளும்
இரட்டை சிம்
12எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி இரண்டாவது கேமரா
20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
இரட்டை 4ஜி வோல்டி
3120 எம்ஏஹெச் (வழக்கமானது) / 3020 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 3.0

சியாமி எம்ஐ 6

சியாமி எம்ஐ 6

முக்கிய அம்சங்கள்


5.15-இன்ச் (1920×1080 பிக்சல்) முழு ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 600 நிட்ஸ் ஒளிர்வு, 94.4% என்டிஎஸ்சி கலர் காமுட், 1500:1 கன்ட்ராஸ்ட் விகிதம்
2.45ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10என்எம் செயலி உடன் அட்ரினோ 540 ஜிபியூ
6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி (யூஎஃப்எஸ்) உள்ளக நினைவகம்
ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 8
இரட்டை சிம் (நானே + நானே)
நீர் தெறிப்பு மேற்கொள்ளும் திறன்
12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 12எம்பி கேமரா
8எம்பி முன்பக்கம் நோக்கிய கேமரா
4ஜி எல்டிஇ
3350எம்ஏஹெச் (வழக்கமானது) / 3250எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சியாமி எம்ஐ 5

சியாமி எம்ஐ 5

முக்கிய அம்சங்கள்


5.15 இன்ச் எஃப்ஹெச்டி முழு லேமினேஷன் டிஸ்ப்ளே
1.8 ஜிஹெச்இசட் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி
3ஜிபி ரேம் உடன் 32ஜிபி ரோம்
இரட்டை சிம்
16 எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை டோன் எல்இடி பிளாஷ் மற்றும் பிடிஏஎஃப்
4 எம்பி முன்பக்க கேமரா
4ஜி வோல்டி / வைஃபை / என்எஃப் / ப்ளூடூத்
இன்ப்ராரெட் சென்ஸர்
3000 எம்ஏஹெச் பேட்டரி

சியாமி எம்ஐ மிக்ஸ் 2எஸ்

சியாமி எம்ஐ மிக்ஸ் 2எஸ்

முக்கிய அம்சங்கள்


5.99-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே உடன் டிசிஐ-பி3 கலர் காமுட்
2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 630 ஜிபியூ
6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம் / 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம், 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) உள்ளக நினைவகம்
ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9
இரட்டை சிம் (நானோ + நானோ)
12எம்ரி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 12எம்பி பின்பக்க கேமரா
5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
இரட்டை 4ஜி வோல்டி
3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300 எம்ஏஹெச்( குறைந்தபட்சம்) பேட்டரி உடன் க்யூசி 3.0 விரைவு சார்ஜிங், 7.5 டபிள்யூ க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்

சியாமி எம்ஐ மிக்ஸ் 2

சியாமி எம்ஐ மிக்ஸ் 2

முக்கிய அம்சங்கள்


5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே உடன் 1500:1 கான்ட்ராஸ்ட் விகிதம், டிசிஐ-பி3 கலர் காமுட்
2.45ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 540 ஜிபியூ
6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம்
8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 128ஜிபி சேமிப்பகம் (சிறப்பு பதிப்பு)
ஆண்ட்ராய்டு 7.1 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9
இரட்டை சிம் (நானோ + நானோ)
12எம்பி பின்பக்க கேமரா உடன் சோனி ஐஎம்எக்ஸ்386 சென்ஸர்
5எம்பி முன்பக்க நோக்கிய கேமரா உடன் முகப்பாவனை கண்டறியும் திறன்
கைரேகை சென்ஸர்
4ஜி எல்டிஇ
3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் குவாட்காம் விரைவு சார்ஜ் 3.0 விரைவு சார்ஜிங்

சியாமி எம்ஐ மிக்ஸ்

சியாமி எம்ஐ மிக்ஸ்

முக்கிய அம்சங்கள்


6.4 இன்ச் எஃப்ஹெச்டி சூப்பர் அல்மோடு டிஸ்ப்ளே
2.35ஜிஹெச்இசட் ஸ்னாப்டிராகன் 821 குவாட் கோர் செயலி
4/ 6ஜிபி ரேம் உடன் 128 / 256ஜிபி ரோம்
16 எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா உடன் இரட்டை எல்இடி பிளாஷ்
5எம்பி முன்பக்க கேமரா
இரட்டை நானோ சிம்
44ஜி எல்டிஇ
வைஃபை
ப்ளூடூத்
என்எஃப்சி
4400 எம்ஏஹெச் பேட்டரி

சியாமி எம்ஐ நோட் 2

சியாமி எம்ஐ நோட் 2

முக்கிய அம்சங்கள்


5.7-இன்ச் (1920 x 1080 பிக்சல்) ஓஎல்இடி 3டி இரட்டை வளைவு கொண்ட கிளாஸ் டிஸ்ப்ளே 110% என்டிஎஸ்சி கலர் காமுட்
2.35ஜிஹெச்இசட் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821 64-பிட் செயலி உடன் அட்ரினோ 530 ஜிபியூ
4ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் 64ஜிபி உள்ளக (யூஎஃப்எஸ் 2.0) நினைவகம் / 6ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் 128 ஜிபி (யூஎஃப்எஸ் 2.0) உள்ளக நினைவகம்
ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மாலோ) உடன் எம்ஐயூஐ 8
இரட்டை சிம் (நானோ + நானோ)
22.56எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை டோன் எல்இடி பிளாஷ்
8எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் முன்பக்கத்தை நோக்கிய கேமரா
4ஜி வோல்டி
4070எம்ஏஹெச் (வழக்கமானது) / 4000 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 3.0

சியாமி ரெட்மீ எஸ்2

சியாமி ரெட்மீ எஸ்2

முக்கிய அம்சங்கள்


5.99-இன்ச் (1440 × 720 பிக்சல்) ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 506 ஜிபியூ
3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம் / 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்
மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்
ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9
இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி)
12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா
16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் எல்இடி பிளாஷ்
4ஜி வோல்டி
3080எம்ஏஹெச் (வழக்கமானது) / 3000எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சியாமி ரெட்மீ நோட் 5

சியாமி ரெட்மீ நோட் 5

முக்கிய அம்சங்கள்


5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 506 ஜிபியூ
3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்
4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்
மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்
ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9
ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)
12எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை- டோன் எல்இடி பிளாஷ்
5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் எல்இடி பிளாஷ்
4ஜி வோல்டி
4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

ஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி

ஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு இணையாக தற்போது சீனாவின் பிரபல தொழிலதிபர் லீ ஜூன் என்பவர் ஒப்பிடப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி வல்லுனரகளின் கணிப்பின்படி தற்போது ஆப்பிள் நிறுவனத்தைவிட ஸ்மார்ட்போன் உலகில் இரு மடங்காக அவர் கொடி கட்டி பறந்து வருகிறார்.

இந்த வாரம் மோர்கன் ஸ்டான்லே என்பவரின் கருத்துப்படி சியோமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உலகளாவில் வர்த்தகத்தில் நல்ல லாபம் பெற்று வருவதோடு மிக வேகமான வளர்ச்சியையும் பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு $65 பில்லியனில் இருந்து $85 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல் வரும் 2019ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமான மிக அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோர்கன்

மோர்கன்

மோர்கன் அவர்களின் தோராயமான கணக்கின்படி ஆப்பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பை விட 2019ஆம் ஆண்டில் சியோமியின் மதிப்பு இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஹார்ட்வேரில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கும் பிட்பிட் மற்றும் கோபுரோ ஆகைஅய் நிறுவனங்களை சியாமி எளிதில் முந்திவிடும் என்றும், அதேபோல் சீனாவின் மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனமான அலிபாபா குரூப் நிறுவனம் மற்றும் பேய்டு நிறுவனங்களை சியோமி பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

குறைந்த லாபம்

குறைந்த லாபம்

வங்கிகளில் உள்ள வல்லுனர்களின் கணக்கின்படி இந்த நிறுவனத்தின் அபாரமான வளர்ச்சி பெற்ற கதை எப்படி என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது,. மேலும் சியோமி நிறுவனமே இதுகுறித்து சுமார் $10 பில்லியன் செலவு செய்து தங்களுடைய முன்னேற்றம் குறித்து மக்களின் அறிவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது

2020ஆம் ஆண்டில் சியாமி நிறுவனம் $92 பில்லியன் சொத்து மதிப்பு உள்ள ஒரு மிக வலிமையான நிறுவனமாக மாறி விடும் என்று பிரத்யேகமான ஒரு அறிக்கையில் ஜேபி மோர்கன் சேஸ் & கோ தெரிவித்துள்ளார். பல நிறுவனங்கள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற தாரக மந்திரமே சியோமியின் அபரீதமான வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது

ஆப்பிள்

ஆப்பிள்

சியோமி நிறுவனத்தின் வரி மற்றும் வட்டி மட்டும் 2020 ஆம் ஆண்டில் 29 பில்லியன் யான் இருக்கும் என்றும், இந்த மூன்று ஆண்டில் இந்த வளர்ச்சி 58 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சீன நிறுவனம் ஸ்மார்ட்பொன்களை சீனாவின் மொத்த உற்பத்தியில் 42% உற்பத்தி செய்து வருவதாகவும், அதாவது இதன் உற்பத்தி எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாகவும், அந்த வல்லுனர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த வளார்ச்சி வரும் 2019ஆம் ஆண்டில் 179 மில்லியனாக இருக்கும் என்றும், 2020ஆம் ஆன்ஹ்டில் 218.6 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி 216.8 என்பது குறிப்பிடத்தக்கது.

100 மில்லியன்

100 மில்லியன்

கோல்ட்மேன் சாச் குரூப் நிறுவனத்தின் கணக்கின்படி சியாமி நிறுவனத்தின் பொருட்களை சீனாவில் மட்டும் சுமார் 100 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது மேலும் இதுகுறித்து கோல்ட்மேன் நிறுவனம் கூறியபோது இண்டர்நெட் பயன்பாட்டாளர்களை குறிவைத்து இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இருப்பதால் இதன் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் ஹார்ட்வேர் பொருட்கள் மற்றும் சாப்ட்வேர் பொருட்களும் நல்ல லாபத்தையும் வருமானத்தையும் பெற்று தருகிறது.


ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக மார்க்கெட்டில் நுழைந்த இந்த நிறுவனம் அதன் பின்னர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி கொண்டது. பெரிய லாபத்தை எதிர்நோக்காததே இந்த நிறுவனத்தின் வளர்ச்சியாக கருதப்படும் நிலையில் ஒருசில பொருட்களில் நல்ல லாபத்துடன் விற்பனை செய்து வருவதாக மோர்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார்.

கொசு விரட்டி மற்றும் மினி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சியோமி.!

கொசு விரட்டி மற்றும் மினி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சியோமி.!

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, தனது முதல் கொசு விரட்டியை 2016ல் அறிமுகப்படுத்தியது.தற்போது இந்நிறுவனம் இரண்டாம் தலைமுறை கொசு விரட்டிகளை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய ஒன்றை விட மிகவும் சக்திவாய்ந்த இந்த கருவி, புதுமையான வடிவமைப்பில் பவர் பேங்க் அல்லது நேரிடையாக ப்ளக் பாய்ண்டில் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக ஏஏ பேட்டரிகளில் செயல்படுகிறது.மேலும் இந்நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய ஸ்கூட்டரை மீ மினி ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

90 நாட்கள் வரை

90 நாட்கள் வரை

இந்த கருவியானது 10 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே செயல்படுவதை நிறுத்திக்கொள்ளும் என இந்நிறுவனம் கூறுகிறது. எளிமையான வடிவமைப்பில் வரும் இந்த கருவியை பயன்படுத்துவது மிகவும் எளிது மற்றும் இதன் மேல் பகுதியை கழற்றுவதன் மூலம் எளிதில் பேட்டரி மற்றும் கொசுவிரட்டி மாத்திரைகளை மாற்றலாம்.


முக்கியமாக இது வெப்பத்தை வெளிப்படுத்தாது மற்றும் இது செயல்பட வெளிப்புற சக்தி எதுவும் தேவையில்லை. 2 ஏஏ பேட்டரியில் செயல்படும் இக்கருவியை நாளொன்றுக்கு சராசரியாக 8மணி நேரம் பயன்படுத்தினால் 90 நாட்கள் வரை நீடித்து நிலைக்கக்கூடியது.

 சியோமி மீ மினி ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்

சியோமி மீ மினி ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்

3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்காகவே பிரத்யோகமான ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது சியோமி. குழந்தைகள் எளிதாக ஸ்கூட்டரை புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப நிலைப்படுத்தும் வகையில் டூயல் ஸ்பிரிங் கிரேவிட்டி சிஸ்டம் இதில் உள்ளது. வலது புறமா இடது புறமா என்பதை பொருட்படுத்தாமல், முன்புறச் சக்கரம் தானாகவே நடுநிலைமைக்கு வந்துவிடும்.

ஸ்கூட்டரில் உள்ள விளக்கு, எலக்ட்ரோ மேக்னெட் இன்டெக்சன் மூலம் மின்சாரத்தை தயாரிப்பதால், இரவு நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 50கிலோ எடையை தாக்கக்கூடியது.

விலை

விலை

வடிவமைப்பை பொறுத்தமட்டில், அரைவட்ட வளைவு வடிவில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியது. கைப்பிடியின் உறைகள் மிகவும் மிருதுவாகவும், மற்றவை உலோகத்தாலும் செய்யப்பட்டவை. இந்த கைப்பிடிகள் ஒரு முறை தொட்டாலே கழன்று வரும் தொழில்நுட்பத்தை சார்ந்தவை. இந்த ஸ்கூட்டர்கள் இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கின்றன.

சியோமி மீ கொசு விரட்டியின் விலை ரூ620 எனவும், மீ மினி ஸ்கூட்டரின் விலை ரூ2610 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பொருட்களும் ஜூன் 8 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இவை வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi 4th Mi Anniversary Sale Starts Today Rs 4 Flash Sale All Major Offers Detailed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X