வெறும் 8 நிமிடத்தில் 100% சார்ஜ் செய்யும் சியோமியின் புதிய ஹைபர்சார்ஜர்: ஆளுக்கு ரெண்டு பார்சல்.!

|

சியோமி நிறுவனம் இன்று இரண்டு புதிய சார்ஜிங் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனம் தற்பொழுது 200W ஹைபர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 120W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் என்ற இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பே, வெறும் 8 நிமிடங்களில் உங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இது பற்றிய கூடுதல் தகவலை பார்க்கலாம்.

8 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

8 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

சியோமி அறிமுகம் செய்துள்ள 120W வயர்லெஸ் சார்ஜிங் உதவியுடன் 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய சாதனத்தின் 4000 எம்ஏஎச் பேட்டரி 100% சார்ஜ் செய்யப்படுகிறது. அதேபோல், சியோமி அறிமுகம் செய்துள்ள 200W வயர்டு ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 8 நிமிடங்களில் 4,000 எம்ஏஎச் பேட்டரியை முழுமையாக சார்ஜிங் செய்துகொள்ளலாம். இந்த புதிய தொழில்நுட்பம் சியோமி Mi 11 ப்ரோ சாதனத்துடன் வருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெமோ செய்யும் வீடியோ

மாற்றியமைக்கப்பட்ட Mi 10 Pro ஸ்மார்ட்போனில் இந்த வேகமான சார்ஜிங் தொழில்நுட்பங்களை டெமோ செய்யும் வீடியோவையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இது ஸ்மார்ட்போனின் 4,000 mAh பேட்டரியை 1 நிமிடத்தில் 10%, 8 நிமிடங்களில் 50% மற்றும் 19 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யப்படுவதைக் காட்டுகிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன்களில் இந்த சார்ஜிங் தொழில்நுட்பங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது வெளியிடப்படவில்லை.

SBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..SBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..

120W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்

120W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்

முன்னதாக சியோமி 120W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வெளியிட்டது. கடந்த ஆண்டு ரியல்மி நிறுவனம் 120W அல்ட்ராடார்ட் ஃப்ளாஷ் சார்ஜிங் தீர்வு மற்றும் iQOO 120W வேகமான சார்ஜிங் தீர்வு ஆகியவற்றை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 4000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 3 நிமிடங்களில் 0% முதல் 33% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று ரியல்மி வெளிப்படுத்தியது.

100% வரை சார்ஜ் செய்ய அனுமதி

100% வரை சார்ஜ் செய்ய அனுமதி

சமீபத்திய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வெறும் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து முடிக்கலாம். iQOO ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் 4000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 5 நிமிடங்களில் 0% முதல் 50% வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 200W fast charging and 120W wireless charging announced : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X