Home
News

மார்க்கெட்டை சிதற விட்ட Xiaomi.. 200MP கேமரா, 6800mAh பேட்டரி, 16GB ரேம் உடன் புதிய போன்.. என்ன மாடல்?

கடந்த செப்டம்பர் 2025 இல் சீன மொபை மார்க்கெட்டை சிதற விட்ட 2 ஷாவ்மீ ஸ்மார்ட்போன் மாடல்களின் உலகளாவிய அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான்.

சீனாவில் ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் வெளியான ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஆகிய 2 மாடல்கள் மட்டும் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது.

மார்க்கெட்டை சிதற விட்ட Xiaomi.. 200MP கேமரா, 6800mAh பேட்டரி, 16GB!

அதாவது இதே சீரிஸின் கீழ் உள்ள ப்ரோ மாடல்கள் ஆன.. அதாவது ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) ஆகிய 2 மாடல்களும் (இந்தியா உட்பட) உலகளாவிய சந்தைகளுக்கு வராது என்பது போல் தெரிகிறது.

ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 அல்ட்ரா எப்போது இந்திய அறிமுகம் எப்போது? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் லேட்டஸ்ட் எக்ஸ் தள பதிவின்படி "வெண்ணிலா" ஷாவ்மீ 17 மற்றும் "ஹை எண்ட்" ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகமானது 2026 ஆம் ஆண்டு எம்டபுள்யூசி மாநாட்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள - உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சிகளில் ஒன்றான எம்டபுள்யூசி 2026 ஆனது வருகிற மார்ச் 5 முதல் 6 வரை பார்சிலோனாவில் நடைபெற உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடல்களின் இந்திய அறிமுகம் மார்ச் 2026 தொடங்குவதற்கு முன்பே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

சீனாவில் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.96,000 க்கும், கடைசியாக உள்ள ஹை எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Xiaomi 17 Ultra Will Launch Globally Before MWC 2026 Event Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X