3-ல் 1 பங்கு கேமரா.. மேட்ரிக்ஸ்-ஸ்டைல் கேமரா யூனிட் உடன் Xiaomi-யின் மினி போன்.. என்ன மாடல்?
2025 ஆம் ஆண்டு என்ன மினி ஸ்மார்ட்போன்களின் (Mini Smartphones) படையெடுப்பிற்கான ஆண்டா? என்று கேட்கும்படியாக பெரிய-பெரிய மொபைல் பிராண்டுகள் குட்டி-குட்டி ஸ்மார்ட்போன்களின் மீது கவனத்தை திருப்பி உள்ளன. ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ் "மினி ஸ்மார்ட்போன்" ஆக ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 3s) அறிமுகமானது.
முதலில் இது ஒன்பிளஸ் 13 மினி என்கிற பெயரில் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சீனாவில் ஒன்பிளஸ் 13T ஆக அறிமுகமாகி பின்னர் இந்தியாவில் ஒன்பிளஸ் 13s ஆக வெளியானது. மினி என்கிற வார்த்தை மாடல் பெயரில் இல்லை என்றாலும், ஒன்பிளஸ் இதை காம்பாக்ட் பிளாக்ஷிப் (Compact Flagship) என்றே விளம்பரப்படுத்துகிறது.

இதை தொடர்ந்து சீனாவில் விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) ஸ்மார்ட்போனாக அறிமுகமான மாடல் இந்தியாவில் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஆக வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலும் மினி என்கிறவார்த்தை மாடல் பெயரில் சேர்க்கப்படவில்லை; ஆனாலும் கூட இதுவும் ஒரு காம்பாக்ட் ஸ்மார்ட்போன் தான்.
இந்த வரிசையில் ஷாவ்மீ நிறுவனமும் சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஷாவ்மீ 16 சீரீஸ் (Xiaomi 16 Series) ஃபிளாக்ஷிப் போன்கள் அறிமுகமாகும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் கீழ் ஷாவ்மீ 14 மற்றும் ஷாவ்மீ 15 சீரிஸின் கீழ் வெளியானதை போலவே - ஸ்டாண்டர்ட், ப்ரோ மற்றும் அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வரும் என்று "நேற்றுவரை" எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் இன்று டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் (Tipster Digital Chat Station) புதிய லீக் ஆனது -ஷாவ்மீ 16 சீரீஸில் 4-வது மாடல் இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. டிசிஎஸ்-ன் கூற்றுப்படி ஷாவ்மீ 16 ப்ரோ மாடல்கள் ஆனது 2 டிஸ்பிளே அளவுகளில் அறிமுகமாகும் - 6.3 இன்ச் மற்றும் 6.8 இன்ச்.
சிறிய மாடல் ஷாவ்மீ 16 ப்ரோ மினி (Xiaomi 16 Pro Mini - தற்காலிக பெயர்) என்றும் பெரிய மாடல் ஷாவ்மீ 16 ப்ரோ என்றும் அழைக்கப்படலாம். இருப்பினும் இரண்டு மாடல்களும் பேக் பேனலில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை ஆக்கிரமித்துள்ள ஒரு பெரிய, கிடைமட்ட மேட்ரிக்ஸ்-ஸ்டைல் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளேவை என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஷாவ்மீ 16 சீரீஸின் இரண்டு ப்ரோ வேரியண்ட்களிலும் மேம்பட்ட புகைப்பட அனுபவத்திற்காக பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஷாவ்மீ 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் மூலம் ஆல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனில் பழைய சோனி LYT-900ஸ் சென்சாருக்கு மாற்றாக ஹூவாய் புரா 80 அல்ட்ரா (Huawei Pura 80 Ultra) ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அதே 1-இன்ச் சென்சாரை ஷாவ்மீ தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையில் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் நடக்கும் பட்சத்தில் ஷாவ்மீ ரசிகர்களுக்கு இது மிகவும் உற்சாகமான தகவலாக இருக்கும் மற்றும் ஷாவ்மீ 16 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மொபைல் போட்டோகிராஃபி (Mobile Photography) விரும்பிகளுக்கான ஒரு தவிர்க்க முடியாத தேர்வாகவும் இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி கேமரா ஹேண்டில், 2,000mAh பேட்டரி மற்றும் பிரிக்கக்கூடிய ஷட்டர் பட்டன் கொண்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன் (Photography Kit Legend Edition) உடன் அறிமுகமானது. இந்த கிட்டின் விலை ரூ. 11,999 ஆகும். இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்படடது.


Click it and Unblock the Notifications








