Xiaomi சிறப்பா.. சிகப்பா.. செஞ்சுவிட்டாப்ல.. ரோக் ரெட் நிறத்தில் XIAOMI 15.. என்ன விலை? எப்போது ரிலீஸ்?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் புதிய சியோமி 15 ஸ்மார்ட்போன் மாடலை கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. சீனப் புத்தாண்டைக் (Chinese New Year) கொண்டாடும் விதமாக இப்போது இந்த சியோமி 15 மாடல் ஸ்மார்ட்போனை நிறுவனம் ரோக் ரெட் (Rouge Red) என்ற புதிய நிறத்துடன் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த புதிய சியோமி 15 ரோக் ரெட் (Xiaomi 15 Rouge Red) மாடல் குறித்த சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் இருந்து தெரிந்துகொள்ளப்போகிறோம்.
புதிய சியோமி 15 ரோக் ரெட் (Xiaomi 15 Rouge Red) மாடல் விலை மற்றும் முழு விபரங்கள் இதோ. இந்த புதிய சியோமி 15 ரோக் ரெட் (Xiaomi 15 Rouge Red Phone) ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் கஸ்டம் எடிஷன் ஸ்ப்ரிங் ஃபெஸ்டிவல் கிஃப்ட் (custom edition for spring festival gift) என்று குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான ரோக் ரெட் நிறத்துடன் மேட் பினிஷ் (matte finish) உடன் சூப்பர் பிரீமியம் சாதனமாக காட்சியளிக்கிறது.

Xiaomi சிறப்பா சிகப்பா செஞ்சுவிட்டாப்ல.. ரோக் ரெட் நிறத்தில் XIAOMI 15:
சியோமி நிறுவனம் இதற்கு முன்பு சீன சந்தையில் சியோமி 15 ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்த போது, அதை பிளாக் (black), வைட் (white), கிரீன் (green), லிலாக் (lilac) சில்வர் (silver) ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்தது. இதற்கு இடையே லிமிடெட் டைமண்ட் எடிஷன் (limited diamond edition) என்ற பிரிவின் கீழ் இன்னும் சில தனிப்பட்ட நிறங்களை சியோமி அறிமுகம் செய்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சியோமி நிறுவனம் தற்போது சியோமி 15 ஸ்மார்ட்போன் மாடலை ரோக் ரெட் (Rouge Red) என்ற சிறப்பு நிறத்துடன் சீனப் புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் நிறத்தை தவிர மற்ற அணைத்து ஹார்டுவேர் (hardware) அம்சங்களும் சியோமி 15 (Xiaomi 15) இன் அடிப்படை மாடலை போன்றே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சியோமி 15 ரோக் ரெட் மாடலை நிறுவனம் தற்போது சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி 15 ரோக் ரெட் (Xiaomi 15 Rouge Red):
சியோமி 15 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 53,500 என்ற விலையை (Xiaomi 15 price) நெருங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியா உட்பட பல நாடுகளில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் சியோமி நிறுவனம் புதிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 15 ரோக் ரெட் சிறப்பம்சம் (Xiaomi 15 Rouge Red Specifications):
- 6.36" இன்ச் 1.5K OLED டிஸ்பிளே (display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- 3200 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Qualcomm Snapdragon 8 Elite SoC)
- 12GB / 16GB ரேம் (RAM)
- 256GB / 512GB / 1TB ஸ்டோரேஜ் (storage)
- 50MP ட்ரிபிள் ரியர் கேமரா (50MP + 50MP + 50MP)
- 32MP செல்பி கேமரா (camera)
- ஆண்ட்ராய்டு 15 உடன் ஹைப்பர் ஓஎஸ் 2.0 (android 15 and Hyper OS 2.0)
- 91W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் (wired fast charging)
- 50W வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging)
- 5400mAh பேட்டரி (battery)


Click it and Unblock the Notifications








