Xiaomi செஞ்ச செய்கை.. சீக்ரெட் வெளியானது.. புது போனுடன் வரும் புது வயர்லெஸ் கேமரா கிட்.. என்னது இது?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் அடுத்த மாஸ்டர் பீஸ் ஸ்மார்ட்போன் (Smartphone) மாடலான சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) சாதனத்தை வெளியிடவுள்ளது. இந்த போனை வயர்லெஸ் கேமரா கிட் (Wireless camera kit) உடன் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
சியோமி நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (flagship smartphone) மாடலாக சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) சாதனத்தை இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக, சியோமி இந்த போனுடன் அறிமுகம் செய்யவுள்ள வயர்லெஸ் கேமரா கிட் (Xiaomi wireless camera kit) பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனுடன் வெளிவரவிருக்கும் சியோமி வயர்லெஸ் கேமரா கிட் (Xiaomi Wireless Camera Kit) பற்றிய தகவல்கள் 3C சான்றிதழ் தளத்தில் (3C certified site) காணப்பட்டுள்ளது. இந்த கேமரா கிட் (camera kit) 3C தளத்தில் 2402CPS69C என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. இது சியோமி லென்ஸ் தொழில்நுட்பத்துடன் (Xiaomi lens technology) சிறந்த கேமரா மற்றும் போட்டோகிராஃபி அனுபவத்தை வழங்கும் அம்சத்துடன் காணப்பட்டுள்ளது.
சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra):
இது சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் (Xiaomi 14 Ultra Smartphone) சாதனத்துடன் தனியாக பொருந்தும் வகையில், ஒரு துணை கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3C பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, இந்த சியோமி வயர்லெஸ் கேமரா கிட் 5V சார்ஜிங் உடன் 1500mAh பேட்டரியை (Battery) பேக் செய்துள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பவர் அடாப்டர் (power adaptor) வராது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியோமி இந்த வயர்லெஸ் கேமரா கிட் சாதனத்தை அறிமுகம் செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு நிறுவனம் அதன் சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் கேமரா கிட் சாதனத்தை வழங்கியது. இதில் 67mm அடாப்டர் ரிங் (67mm adapter ring), ஷட்டர் பட்டன் உடன் கூடிய கேமரா ஹேண்டில் (camera handle), லென்ஸ் கவர் (lens cover) போன்றவற்றை கிட் உடன் வழங்கியது.

சியோமி வயர்லெஸ் கேமரா கிட் விலை என்ன? (Xiaomi Wireless Camera Kit Price):
இந்த சாதனம் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆதரவுடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பின் படி ரூ.9,000 என்ற விலையில் சீன சந்தையில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயர்லெஸ் கேமரா கிட் சியோமி 13 அல்ட்ரா சாதனத்திற்கு மட்டும் பொருந்தும் படி வடிவமைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது சியோமி இன் எல்லா மாடல் போன்களுடனும் (Xiaomi phones) இணக்கமானது.
ஆகையால், சியோமி ஸ்மார்ட்போன்களை வைத்துள்ள அனைவரும் இந்த சாதனத்தை தனியாக வாங்கி பயன்பெற முடியும். கடந்த முறை, சியோமி நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீன சந்தையில் மட்டுமே இந்த சியோமி வயர்லெஸ் கேமரா கிட்டை அறிமுகம் செய்து வெளியிட்டது. ஆனால், இந்த முறை நிறுவனம் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் இந்த வயர்லெஸ் கேமரா கிட் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று வதந்திகள் வெளியாகியுள்ளன.
இதன் விலை ஏறக்குறைய ரூ.9000 முதல் ரூ.10,000 தொகைக்குள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் சலுகையாக குறைந்த விலையில் வழங்கவும் அதிக வாய்ப்புள்ளதாக டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும், மார்ச் மாதத்தில் இந்த சாதனம் பற்றிய கூடுதல் விபரங்கள் நமக்கு தெரிய வரும். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








