அட்ராசக்கை! Xiaomi 13 Ultra இனி புதுசா 3 நிறங்களிலா? இதுல ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு! அது என்ன தெரியுமா?
சியோமி (Xiaomi) நிறுவனம், அதன் புதிய சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) ஸ்மார்ட்போனை 3 புதிய மிரட்டலான நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 புதிய நிறங்களும் லெதர் தோற்றத்தில் வெளிவருகிறது. இந்த லெதருக்கு ஒரு தனி-சிறப்பே இருக்கிறதாம்.
அது என்னவென்று பார்க்கலாமா? இந்த புதிய Xiaomi 13 Ultra நிறங்கள் மற்றும் இதன் சிறப்பம்சம் மற்றும் இந்த சாதனத்தின் விலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி கடந்த மாதம் சீனாவில் ஃபிளாக்ஷிப் சியோமி 13 அல்ட்ராவை வைட், பிளாக் மற்றும் ஆலிவ் கிரீன் ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், நிறுவனம் இப்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலை மேலும் மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்யதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Xiaomi நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனான Xiaomi 13 Ultra ஐ சீனாவில் பிளாக், வைட் மற்றும் ஆலிவ் க்ரீன் வண்ணங்களில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இன்று, நிறுவனம் புதிதாக 3 நிறங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இப்போதைய புதிய நிறங்களாக கேபெர்னெட் ஆரஞ்சு (Cabernet Orange), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் கிங்கோ எல்லோவ் (Ginkgo Yellow) ஆகிய வண்ண வகைகளை சியோமி நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புற பேனல் லெதர் வடிவமைப்பை பெற்றுள்ளன. இது சாதாரணமாக லெதர் இல்லை என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த லெதர் அனைத்தும் ஒரே மாதிரியான இரண்டாம் தலைமுறை நானோடெக் சிலிகான் லெதர் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
இது கைரேகைகள் மற்றும் கறைகள் மற்றும் அழுக்குகளுக்கு எதிர்ப்புத் தருவது மட்டுமல்லாமல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பழமையான மஞ்சள் நிறத்தைத் தடுக்கும் திறன் கொண்டது என்று Xiaomi தெரிவித்துள்ளது. அதாவது இது ஆண்டி-பாக்டீரியல் மற்றும் கலர் ஃபேட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை பெற்றுள்ளது. இதனால், உங்கள் போனில் பாக்டீரியா உருவாவதை 99% வரை இது தடுக்கிறது.

சியோமி 13 அல்ட்ரா சாதனத்தின் நிறங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர, போனின் மற்ற விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.73' இன்ச் குவாட் HD+ LTPO AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் இயங்குகிறது. இது குவாட் 50MP கொண்ட ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP கேமராவை கொண்டுள்ளது.
சியோமி 13 அல்ட்ரா 5,000mah திறன் உடன் 90W வயர்டு டர்போ சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், Xiaomi 13 Ultra இன் புதிய ஆரஞ்சு, ப்ளூ மற்றும் மஞ்சள் வண்ண வகைகள் 16GB + 512GB வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 76,960 ஆகும். மே 6 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். விரைவில் இந்தியா வருகிறது.


Click it and Unblock the Notifications








