Home
News

இது போனா? DSLR கேமராவா? உச்சு கொட்டும் Xiaomi 13 Ultra லீக்

இதுவரை வெளியான கேமரா போன்களை (Camera Phones) தட்டித் தூக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) போன் ஜூன் மாதம் இங்கிலாந்தில் வெளியாக காத்திருக்கிறது. இப்போது விலை குறித்த தகவல்கள் ட்விட்டரில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்கள் இதோ.

சியோமி 13 அல்ட்ரா போன் சீனாவில் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த போனின் சோனி சென்சாருடன் கூடிய கேமராக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. ஆனால், விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்தன.

இது போனா? DSLR கேமராவா? உச்சு கொட்டும்  Xiaomi 13 Ultra லீக்

இப்போது விலை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதில் சியோமி 13 அல்ட்ரா போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை 1,499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1,33,000) ஆக நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை சீனாவில் விற்பனை செய்யப்பட்டதை விட அதிகமாகும். இந்த போனுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அந்த போனில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சியோமி 13 அல்ட்ரா அம்சங்கள்: இந்த சியோமி போன் 6.73 இன்ச் (3200x1440 பிக்சல்கள்) டபிள்யூகியூ எச்டிபிளஸ் (WQHD+) அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு (Android) 13 மற்றும் அட்ரினோ 740 ஜிபியூ (Adreno 740 GPU) உடன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 5ஜி ( Octa-Core Qualcomm Snapdragon 8 Gen 2 5G ) சிப்செட் வருகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. 1 டிபி வரையில் ஸ்டோரேஜ் வேரியண்ட் இருக்கிறது.

இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில் சோனி IMX989 சென்சாருடன் 50 எம்பி மெயின் (Main) கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultrawide Lens) + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) + 50 வைட் ஆங்கிள் (Wide Angle) கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டிருக்கிறது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சியோமி போன் பிளாக் (Black), வைட் (White) மற்றும் கிரீன் (Green) என மூன்று கலர்களில் கிடைக்கிறது. சீனாவில் சியோமி 13 அல்ட்ரா மூன்று விலைகளில் விற்பனையாகிறது.

அதாவது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 5,999 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 71,545) ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 6,499 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 77,545) ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் விலை 7,299 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 87,090) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13 Ultra Price in Europe Leaked Ahead of Official Announcement Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X