Home
News

போட்டின்னு வந்துட்டா ஆப்பிள்ளாவது அன்னாசியாவது? Xiaomi அடிச்ச அடியால் புது டிவிஸ்ட்!

சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 13 அல்ட்ரா சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த சாதனம் ஒன்பிளஸ், சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு போன்களுடன் போட்டியிடும் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, சியோமி ஆப்பிள் நிறுவனத்தை மறைமுகமாக தாக்குவது போல் தெரிகிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி கடந்த மாதம் சீனாவில் ஃபிளாக்ஷிப் சியோமி 13 அல்ட்ராவை வைட், பிளாக் மற்றும் ஆலிவ் கிரீன் ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், நிறுவனம் இப்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலை மேலும் மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டின்னு வந்துட்டா ஆப்பிள்ளாவது அன்னாசியாவது? Xiaomi அடிச்ச அடி!

சமீபத்தில், Xiaomi இன் நிறுவனர் மற்றும் CEO, லெய் ஜூன் (Lei Jun), நிறுவனத்தின் தலைவர் லு வெய்பிங் (Lu Weibing) உடன் இணைந்து ஒரு தகவலை லீக் செய்துள்ளனர். Xiaomi 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கான விருப்பமான வண்ணங்களைப் பற்றி இவர்களுடைய பதிவு சில துணுக்குகளை கசியவிட்டுள்ளது. Xiaomi 13 Ultra விரைவில் 3 கூடுதல் புதிய வண்ண விருப்பங்களை பெரும் என்பதற்கான அறிகுறியை இது குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி 13 அல்ட்ரா ஃபார்ம்வேரில் இருந்து நெட்டிசன்களால் மூன்று புதிய வண்ணம் பொருந்திய வால்பேப்பர்கள் காணப்பட்டுள்ளன. சியோமி 13 அல்ட்ராவின் வால்பேப்பர்களின் சாயல்கள் ஸ்டாரி ஸ்கை ப்ளூ, சிக்ஸியா ஆரஞ்சு மற்றும் ஜின்கோ எல்லோவ் நிறங்களுடன் காட்சியளிக்கின்றன. தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக கடந்த மாதம் மஞ்சள் நிற ஆப்பிள் ஐபோன் 14 வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்தது என்பது கவனிக்கத்தக்கது.

நிறங்களின் மூலம் சியோமி நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தை மறைமுகமாக சீண்டி பார்க்கிறதா என்ற எண்ணம் எழுந்துள்ளது. Xiaomi 13 Ultra ஆனது மூன்று புதிய வண்ணங்களை விரைவில் வெளியிடும் என்று நம்பப்படுகிறது. இது Xiaomi 13 வியாபாரத்தை பெருக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஃபிளாக்ஷிப் Xiaomi 13 Ultra இன்னும் உலகளவில் வெளியிடப்படவில்லை. ஆனால், Mydrivers அறிக்கையின்படி இது சீனாவிற்கு வெளியே கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

போட்டின்னு வந்துட்டா ஆப்பிள்ளாவது அன்னாசியாவது? Xiaomi அடிச்ச அடி!

Xiaomi 13 அல்ட்ரா சிறப்பம்சம் பற்றி பார்க்கையில், இது 6.73' இன்ச் 2K AMOLED LTPO டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது HDR10+ மற்றும் வளைந்த விளிம்புகளுடன் கூடிய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் மூலம் Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 50W வயர்லெஸ் மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Xiaomi 13 Ultra ஆனது 50MP Sony IMX989 பிரைமரி கேமரா, 50MP சோனி IMX858 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 50MP சூப்பர் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, போனின் முன்பக்கத்தில் 32MP சென்சார் உள்ளது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வரை கொண்டுள்ளது.

மற்ற அம்சங்கள்: ஃபோனில் பாதுகாப்புக்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ், டால்பி அட்மோஸ், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இது இப்போது வழக்கமான 3 நிறங்களுடன், கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது என்பதே ஸ்பெஷல் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13 Ultra Gets New 3 Colour Options Soon Including Ginkgo Yellow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X