Home
News

Xiaomi 13 Ultra தான் இனி கிங்குடா! பிளாக்ஷிப் போனைலாம் தூக்கி சாப்பிட போகுது! விலை இதுவா?

என்னதான் விதவிதமாக புது ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஒரு சில போன்களை பார்த்தவுடன் அதை கட்டாயம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நமக்குள் தோன்றிவிடும். அத்தகைய ஆர்வத்தை நமக்குள் உருவாக்கிய ஒரு சாதனம் தான் Xiaomi 13 Ultra ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் பிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் சாதனமாக விரைவில் அறிமுகமாகவிருக்கும் டிவைஸ் தான் இந்த சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) சாதனமாகும். Xiaomi நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வரிசையில் சிறப்பான அம்சங்களுடன், தரமான வடிவமைப்பில் அறிமுகம் செய்ய காத்திருக்கும் புதிய மாடலான Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் பற்றி சில தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Xiaomi 13 Ultra தான் இனி கிங்குடா! எல்லாத்தையும் தூக்கி சாப்பிட போகுது

சியோமி நிறுவனம் இந்த புதிய Xiaomi 13 Ultra சாதனத்தை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள Xiaomi 13 Pro உடன் ஒப்பிடும் போது, ​​இந்த சாதனம் Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன், மிகவும் வேகமான பெர்பார்மென்ஸ் உடன், இதுவரை இல்லாத ஒரு புதிய கேமரா தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த Xiaomi 13 Ultra என்ற பிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் உடன், Xiaomi நிறுவனம் தனது அடுத்த ஜென் டேப்லெட் வரிசையையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல் லீக் ஆகியுள்ளது. இது Xiaomi Pad 6 சீரிஸ் என அழைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Xiaomi 13 Ultra மற்றும் Xiaomi Pad 6 ஆகிய இரண்டு புதிய சியோமி சாதனங்களும் இப்போது 3C சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.

இதில் Xiaomi 13 Ultra மற்றும் Xiaomi Pad 6 சாதனத்தின் பாஸ்ட் சார்ஜிங் திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 3C சான்றிதழ் பக்கத்தில் காணப்படுவது போல், Xiaomi 13 Ultra சாதனம் மாடல் எண் Xiaomi 2304FPN6DC உடன் காணப்பட்டது. இதில் இந்த சாதனம் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் (20VDC, 4.5A) என்பதைப் பட்டியல் விபரம் தெளிவாகக் காண்பிக்கிறது.

Xiaomi 13 Ultra தான் இனி கிங்குடா! எல்லாத்தையும் தூக்கி சாப்பிட போகுது

மறுபுறம், Xiaomi Pad 6 சாதனம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது (20VDC, 3.25A) என்று பட்டியல் விபரம் காண்பிக்கிறது, வரவிருக்கும் புதிய சியோமி பேட் 6 சாதனம் மாடல் எண் 23046RP50C உடன் காணப்பட்டுள்ளது. Xiaomi Pad 6 சாதனம் மற்றும் Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டும் சீன வகையைச் சேர்ந்தவை என்பதை மாடல் எண்களின் முடிவில் உள்ள C எழுத்து குறிப்பிடுகிறது.

எனவே, சாதனங்கள் சீனா சந்தையில் எப்போது வேண்டுமானாலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கூடிய 2K தெளிவுத்திறன் E6 AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்டை கொண்டிருக்கும்.

இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS4.1 ஸ்டோரேஜ் உடன் வெளிவரும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸை கொண்டிருக்கும். கேமராவுக்கு வரும்போது, ​​Xiaomi 13 Ultra ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், சாதனம் 32MP செல்ஃபி ஸ்னாப்பரைக் கொண்டிருக்கலாம்.

பின்புறத்தில், மூன்று Sony IPX858 50MP கேமராக்கள் மற்றும் ஒரு Sony IMX989 50MP பிரைமரி கேமராவை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் விலை பற்றி பார்க்கையில், சியோமி 13 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதகமானது இந்திய சந்தியில் தோராயமாக ரூ, 78,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 13 Ultra flagship phone is going to be the King Of Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X