சியோமி 12 ப்ரோ இந்திய விலை இவ்வளவா?- விரைவில் அறிமுகமாகும் சியோமி 12எக்ஸ், சியோமி 12எக்ஸ் ப்ரோ!
சியோமி 12 எக்ஸ், சியோமி 12எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல் சியோமி 12 ப்ரோ, சியோமி 12எக்ஸ் சாதனங்கள் அமேசான் மூலமாக விற்பனைக்கு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் சியோமி 12 ப்ரோ விலையை டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் டிப் செய்துள்ளார். சியோமி 12 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சியோமி இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்ளவில்லை. அமேசான் மற்றும் நிறுவனத்தின் தளம் மூலம் இந்த சாதனம் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சியோமியின் முதன்மை ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து சீன நிறுவனமான சியோமி., சியோமி 12எக்ஸ் ப்ரோ உடன் சியோமி 12 எக்ஸ் சாதனத்தையும் நாட்டில் அறிமுகப்படுத்தலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

சியோமி 12 ப்ரோ குறித்து வெளியான தகவல்
இந்தியாவில் சியோமி 12 ப்ரோ விலை ரூ.65,000 முதல் தொடங்கும் என ப்ரார் டுவிட் செய்துள்ளார். சீனாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.56,000 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.59,600 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.64,400 ஆக இருக்கிறது. இதன் உடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை பிற சந்தைகளில் ரூ.75,900 ஆக தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் மூலமாக விற்பனைக்கு வரும்
சியோமி 12 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சாதனம் அமேசான் மூலமாக விற்பனைக்கு வரும், அதேபோல் சியோமியிந் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாகவும் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி ஆதரவு
கூடுதலாக சியோமி 12 ப்ரோ இந்திய விலைக் குறித்து பார்க்கையில், இது சியோமி 12எக்ஸ் மற்றும் சியோமி 12 எக்ஸ் ப்ரோ ஆனது "குறைந்த விலை விருப்பங்கள்" உடன் அறிமுகப்படுத்தலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சியோமி 12 எக்ஸ் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சியோமி 12எக்ஸ் ப்ரோ சாதனமானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது புதிய சிப்செட் பயன்பாடாகும் என தகவல் தெரிவிக்கிறது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
அதேபோல் சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் டீசரை சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2K resolution, 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 12இயங்குதள ஆதரவு
இந்த புதிய சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக கேமிங்உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும் என்றே கூறலாம். அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications