டாப் டக்கர் ஸ்பெக்ஸ் உடன் வெளிவர ரெடியாகும் Xiaomi 12T Pro.! இதுல 200MP கேமரா இருக்கா?

|

Xiaomi நிறுவனம் இந்த ஆண்டில் மிகவும் சிறப்பாகச் செயல்படுவது போல் தெரிகிறது. காரணம், சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, சில சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் புது விதமான கேட்ஜெட் டிவைஸ்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்தபடியாக, சியோமி மற்றொரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது.

தரமாக தயாராகும் புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போன்

தரமாக தயாராகும் புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்திற்குச் சொந்தமான, அடுத்து வரவிருக்கும் ஸ்மார்ட்போன் மாடலின் பெயர் தான் Xiaomi 12T Pro ஆகும். சியோமி ரசிகர்கள் மற்றும் உலக ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ஈர்த்துள்ளது. காரணம், இது பல சூப்பர் டாப் ஸ்பெக்ஸ் அம்சங்களுடன் அறிமுகத்திற்குத் தயாராகி இருக்கிறது. உதாரணமாக, இதில் 200MP கேமரா எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 12T Pro-வில் என்னென்ன சூப்பர் மேட்டர்கள் இருக்கிறது?

Xiaomi 12T Pro-வில் என்னென்ன சூப்பர் மேட்டர்கள் இருக்கிறது?

சரி, இப்போது இந்த புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன சூப்பர் மேட்டர்கள் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம். சமீபத்தில் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது Google Play Console வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சியோமி 12T ப்ரோ டிவைஸ் இதற்கு முன்பு FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

இது ரீபிராண்டட் மாடலா? எந்த மாடலுடையது தெரியுமா?

இது ரீபிராண்டட் மாடலா? எந்த மாடலுடையது தெரியுமா?

அதேபோல், Xioami 12T Pro போனின் புகைப்படம் டிசைன் விபரங்கள் மற்றும் கேமரா விபரங்கள் கூட இணையத்தில் லீக் ஆனது. மற்றொரு லீக் தகவலில் Xiaomi 12T Pro இன் ஹார்டுவேர் விபரங்கள் கூட வெளியானது. சியோமி 12T ப்ரோவின் இந்த கசிந்த விபரங்களை வைத்து பார்த்தால், இது இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50 Ultra இன் ரீபிராண்டட் பதிப்பாக தெரிகிறது.

கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) கோட்நேம்

கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) கோட்நேம்

சியோமி 12டி ப்ரோவின் கூகுள் பிளே கன்சோல் பட்டியல் விபரங்கள் அதன் வெளியீட்டு நிகழ்வு மிக விரைவில் நடக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சரி, இந்த அட்டகாசமான Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். Xiaomi 12T Pro இந்த கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) என்ற கோட்நேம் பெயருடன் பதிவிடப்பட்டுள்ளதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறதா?

லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறதா?

இதே கோட்நேம் பெயரை சியோமி இதற்கு முன்பு ரெட்மி கே50 அல்ட்ராவில் பயன்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது. Xiaomi 12T Pro டிவைஸ் 12ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் Adreno 730 GPU உடன் வருமென்று பட்டியல் குறிப்பிடுகிறது. Xiaomi 12T Pro சாதனம் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆப் தி பாக்ஸில் வரும். இது 1220×2712 பிக்சல் மற்றும் 480 டென்சிட்டி கொண்ட டிஸ்பிளேவுடன் காணப்பட்டுள்ளது.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

Xiaomi 12T Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Xiaomi 12T Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சியோமி 12டி ப்ரோ உண்மையில் ரெட்மி கே50 அல்ட்ராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருந்தால், அது ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 120Hz ஆதரிக்கும் 6.67' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் கேமரா அம்சம்

Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் கேமரா அம்சம்

கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இந்த டிவைஸ் 200MP அல்லது 108MP பிரைமரி கேமரா சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் உடைய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. முன்பக்கத்தில் 20MP அல்லது 30MP ஸ்னாப்பர் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரூ.39,000 என்ற விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 12T Pro specifications Spotted On Google Play Console Before Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X