யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 12எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சியோமி 12S தொடரின் ப்ரீமியம் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மேம்பட்ட வகையில் இருக்கிறது. இதன் விலையும் ஐபோனுக்கு இணையாக இருக்கிறது. Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம் வாங்க.

எல்லாமே குறிப்பிடத்தக்க அம்சங்கள்

எல்லாமே குறிப்பிடத்தக்க அம்சங்கள்

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனானது 50MP Sony IMX989 கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வெளியாகி இருக்கிறது. இதன் மெயின் சென்சார் 1-இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. ஆனால் இதன் விலையை கேட்டால் தான் சற்று அதிர்ச்சியடைய வைக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 12எஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 12எஸ்

Xiaomi 12S தொடரில் சியோமி 12 எஸ், சியோமி 12 எஸ் ப்ரோ, சியோமி 12 எஸ் ப்ரோ சாதனங்களை கொண்டிருக்கிறது. இந்த அனைத்து மாடல்களிலும் சியோமி 12 எஸ் அல்ட்ரா தனித்துவ வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் கேமரா தொகுதி வட்ட வடிவில் இருக்கிறது. அதேபோல் இதன் முன்பக்கத்தில் சூப்பர் பிரைட்னஸ் 2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே எப்படி?

புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே எப்படி?

சியோமி 12எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இது 6.73 இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. டால்பி விஷன் ட்ரூகலர் டிஸ்ப்ளே ஆனது 3200 x 1440 ரெசல்யூஷனை கொண்டிருக்கிறது. இதன் WQHD+ டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1500 நிட்ஸ் பிரகாசம் மற்றும் HDR10+ சான்றிதழை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா எப்படி?

ஸ்மார்ட்போனின் கேமரா எப்படி?

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமராக்கள் ஆகும். இதன் முதன்மை கேமரா சோனியின் IMX989 லென்ஸை கொண்டிருக்கிறது. IMX989 என்பது 1-இன்ச் சென்சார் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முதன்மை கேமரா மெகாபிக்சல் 50MP ஆகும். டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இரண்டாம் நிலை கேமரா குறித்து பார்க்கையில், இதில் 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கேமராவாக 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் இதன் பிரதான கேமரா HyperOIS அம்சம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சாஃப்ட்வேர் எப்படி இருக்கிறது தெரியுமா?

சாஃப்ட்வேர் எப்படி இருக்கிறது தெரியுமா?

Xiaomi 12S Ultra ஆனது TSMC மூலம் தயாரிக்கப்பட்ட 4nm Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC அம்சத்தோடு வெளியாகி உள்ளது. மேம்பட்ட சாதனத்துக்கு ஏற்ற சிப்செட் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவை உறுதி செய்யும் வகையில் ஐபி68 சான்றிதழ் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹர்மன் கார்டனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IR Blaster ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன் விவரம்

பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன் விவரம்

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனில் 4860mAH பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 67W வயர்ட் டர்போ சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்ட் டர்போ சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 67W சார்ஜிங் மூலம் 4860 எம்ஏஎச் பேட்டரியை 15 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

Xiaomi 12S அல்ட்ரா விலை என்ன தெரியுமா?

Xiaomi 12S அல்ட்ரா விலை என்ன தெரியுமா?

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.70,739 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.82,539 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12S Ultra Launched With 50MP Sony IMX989 Camera, 67W Turbo Charging: specs, price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X