Home
News

போட்டி பலமா இருக்கும் போல: உச்சரக கேமரா மற்றும் அம்சங்கள் உடன் சியோமி 12 அல்ட்ரா!

சியோமி 12 அல்ட்ரா சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் அதன் வடிவமைப்புடன் வெளியிடப்பட்டன. இந்த சாதனம் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

சியோமி 12 அல்ட்ரா குறித்த வதந்திகள்

சியோமி 12 அல்ட்ரா குறித்த வதந்திகள்

சியோமி 12 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சியோமி 12 அல்ட்ரா குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. சியோமி 12 அல்ட்ரா குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த சாதனம் 2022 முதல் காலாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 2022 முதல் காலாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த சாதனம் உலக சந்தையில் இம்மாதம் அறிமுகப்படுத்தலாம் என வதந்திகள் பரவின.

சியோமி 12 அல்ட்ரா வெளியீடு

சியோமி 12 அல்ட்ரா வெளியீடு

தற்போது சியோமி 12 அல்ட்ரா வெளியீட்டை இரண்டாம் காலண்டின் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிராண்ட் சியோமி 12 அல்ட்ரா சாதனம் ஜென்1-க்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ளஸ் எஸ்ஓசி உடன் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக புதிய ரெண்டர்கள் தெரிவிக்கின்றன. சியோமி 12 அல்ட்ரா சில முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு குறித்து பார்க்கலாம். சியோமி 12 அல்ட்ரா முக்கிய விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது டிப்ஸ்டர் @Shadow_leaks சில படங்கள் மற்றும் ஃப்ளாக்ஷிப் சியோமி 12 அல்ட்ரா முக்கிய விவரக்குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன. கேமராவில் தொடங்கி சாதனம் சாதனம் வட்ட பின்புற கேமரா தொகுதியுடன் வரும் என்பதையும் இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டு 50 எம்பி சோனி கேமரா

இரண்டு 50 எம்பி சோனி கேமரா

அதேபோல் ஃப்ளாக்ஷிப் சியோமி 12 அல்ட்ரா ஆனது இரண்டு 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார்கள், 16 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 48 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றுடனான குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி 12 அல்ட்ரா ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ளஸ் மூலம் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.

6.73-இன்ச் 2கே இ5 அமோலெட் டிஸ்ப்ளே

6.73-இன்ச் 2கே இ5 அமோலெட் டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போனில் எல்டிபிஓ 2.0 தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 6.73-இன்ச் 2கே இ5 அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது, மேலும் இது 10 பிட் வண்ணம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் ஆதரிக்கும் எனவும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. பிற அம்சங்களை பொறுத்தவரையில் இது 120 வாட்ஸ் சார்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎத் பேட்டரி இடம்பெறும் எனவும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கூடுதலாக நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 மதிப்பீடு ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது. மற்றொரு அறிக்கையில் இது 120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இது 4,860 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சியோமி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

சியோமி 12 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சியோமி 12 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சியோமி 12 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில்., சியோமி 12 அல்ட்ரா சாதனத்தின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த சாதனம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்போது, ​​12 தொடர்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த சியோமி தயாராகி வருகிறது. சியோமி 12, சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி 12 எக்ஸ் ஆகியவை மார்ச் 15 அன்று அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவித்தது.

சியோமி 12 எதிர்பார்க்கப்படும் விலை

சியோமி 12 எதிர்பார்க்கப்படும் விலை

சியோமி 12 ஆனது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ. 75,100 என்ற ஆரம்ப விலையுடன் வரும் என்று கூறப்படுகிறது, அதே சமயம் ப்ரோ மாடல் ஆனது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.91,800 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 எக்ஸ் ஆனது இந்திய மதிப்புப்படி தோராயமாக சுமார் ரூ.50,120 மற்றும் ரூ.58,474 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. சியோமி 12 தொடர் குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Ultra Might be Launching with this Design: Expected Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X