சியோமி கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஐ நீங்க எதிர்பார்த்து இருக்கவே மாட்டீங்க!

|

பிரீமியம் ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்றுக்கொண்டு இருந்தால் "வேலைக்கு ஆகாது" என்று, பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய ஒன்பிளஸ் நிறுவனத்தின் வியாபார தந்திரத்திற்கும்...

வெறுமனே பட்ஜெட் & மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து கொண்டிருந்தால் உலகளாவிய போட்டியாளர்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் "மரியாதை" இருக்காது என்று ஹை-எண்ட் பிரீமியம் மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்த சியோமி நிறுவனத்தின் வியாபார தந்திரத்திற்கும் - பெரிய வித்தியாசம் இல்லை!

ஹை -எண்ட் என்றாலே 'அல்ட்ரா' தான்!

ஹை -எண்ட் என்றாலே 'அல்ட்ரா' தான்!

சியோமியின் ஹை-எண்ட் மாடல் என்றதுமே உங்களில் பலருக்கும், நிறுவனத்தின் 'அல்ட்ரா' சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஞாபகம் வந்திருந்தால், அதில் எந்த தவறும் இல்லை.

ஏனெனில் நாம் அதே சீரீஸின் கீழ் வரப்போகும் அடுத்த மாடலை பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம். அதென்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அதன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சியோமி 12 அல்ட்ரா - எப்போது அறிமுகமாகும்?

சியோமி 12 அல்ட்ரா - எப்போது அறிமுகமாகும்?

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி, கூடிய விரைவில் அதன் அல்ட்ரா சீரீஸின் கீழ் புதிய மாடலை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி அது சியோமி 12 அல்டரா தான்!

ஜிஎஸ்எம்ஏரேனா வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, Xiaomi 12 Ultra மாடல் ஆனது வருகிற ஜூலை 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

அதே நாளில் அறிமுகமாகும் இன்னொரு 'வெயிட் ஆன' போன்!

அதே நாளில் அறிமுகமாகும் இன்னொரு 'வெயிட் ஆன' போன்!

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் "புரோமோக்கள் மற்றும் டீஸர்கள்" ஒரு வாரத்திற்கு முன்னதாக, அதாவது ஜூன் 28 முதல் தொடங்கும் என்று வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சியோமி 12 அல்ட்ராவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை; அதாவது இந்த தேதி மாற்றத்திற்கு உட்பட்டது, எனவே இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

அதுமட்டுமின்றி அசுஸ் ROG போன் 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் அதே தேதியில் (ஜூலை 5) தான் வெளியாகும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், லேட்டஸ்ட் அல்ட்ரா மாடலின் அறிமுக தேதியில், நாம் நிச்சயம் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்!

அசுஸ் கிடக்குது... நாம் அல்ட்ராவின் அல்டிமேட் அம்சங்களுக்குள் வருவோம்!

அசுஸ் கிடக்குது... நாம் அல்ட்ராவின் அல்டிமேட் அம்சங்களுக்குள் வருவோம்!

வரவிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் ஆனது "வழக்கம் போல" ஒரு தனித்துவமான கேமரா செட்டப் உடன் வரும் என்றும், அதில் Leica நிறுவனத்தின் கேமரா சென்சார்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Xiaomi 12 Ultra ஆனது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

டிஸ்பிளே, ரேம், ஸ்டோரேஜ்-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

டிஸ்பிளே, ரேம், ஸ்டோரேஜ்-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இதுவரை வெளியான அறிக்கைகளின்படி சியோமி 12 அல்ட்ரா, 6.7-இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம், அது LTPO டெக்னாலஜி, Quad HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற ஆதரவுகளை வழங்கலாம்.

மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் வழங்கலாம்.

டூயல்-ரியர் கேமராவா? அல்லது குவாட் கேம் செட்டப்-ஆ?

டூயல்-ரியர் கேமராவா? அல்லது குவாட் கேம் செட்டப்-ஆ?

இரண்டுமே இல்லை! சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் 50MP மெயின் கேமராவுடன் இரண்டு 48MP சென்சார்கள் இடம்பெறலாம். இதன் கேமரா அமைப்பில் ToF லென்ஸ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் ஆதரவும் இருக்கலாம்.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை ஒரு 20MP கேமரா பூர்த்தி செய்யும்.

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சியோமி 12 அல்ட்ராவில் 4800mAh பேட்டரி யூனிட் பேக் செய்யப்படலாம் என்றும், அது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) அறிமுகமாகும் என்றும் நம்பலாம்.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 72,999 முதல் 74,999 க்குள் என்கிற விலைக்கு வெளியாகலாம்.

ஆனால் இது எந்த அளவிற்கு தோராயமான ஒரு விலையாகும் என்பதை குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர்கள் வெளியான பின்னரே நாம் அறிந்துகொள்ள முடியும்.

Photo Courtesy: Onleaks, Zoutonus, Notebookchek
Source: GSMArena

Best Mobiles in India

English summary
Xiaomi Upcoming Premium SmartPhone Xiaomi 12 Ultra may launch on July 5 Check Expected Specifications and Price in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X