பலே., செம வாய்ப்பு: சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி- உடனே முந்துங்கள்!

|

சியோமி இந்தியாவில் ஃபிளாக்ஷிப் 12 ப்ரோ ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி அடிப்படையிலான ஆதரவோடு 120 வாட்ஸ் சார்ஜிங், டிரிபிள் ரியர் கேமரா என பல்வேறு சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.62,999 என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் சியோமி 12 ப்ரோ சாதனமானது ரூ.52,999 என கிடைக்கிறது.

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மான்சூன் கார்னிவல் தள்ளுபடி விற்பனையின் ஒரு பகுதியாக இந்த சலுகை கிடைக்கிறது. தள்ளுபடி விவரங்கள் குறித்து பார்க்கையில், சியோமி 12 ப்ரோ சாதனத்தை அமேசான் தளத்தில் வாங்கும் போது ரூ.4000 அமேசான் தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். அதேபோல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ரூ.6000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன்படி அமேசான் தளத்தில் சியோமி 12 ப்ரோ சாதனத்தை ரூ.10,000 தள்ளுபடியுடன் வாங்கலாம்.

அமேசான் தளத்தில் தள்ளுபடி அறிவிப்பு

அமேசான் தளத்தில் தள்ளுபடி அறிவிப்பு

அமேசான் தளத்தில் சியோமி 12 ப்ரோ சாதனத்தை மேலே குறிப்பிட்டுள்ளபடி வாங்கும் போது, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு சாதனத்தை ரூ.52,999 என வாங்கலாம். இதன் நிர்ணய விலை ரூ.62,999 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.56,999 என வாங்கலாம். இதன் நிர்ணய விலை ரூ.66,999 ஆகும். சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது Noir Black, Opera Mauve மற்றும் Couture Blue என்ற மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.73-இன்ச் 2கே AMOLED டிஸ்ப்ளே வசதியுடன் கிடைக்கிறது. இதனுடன் 3200 x 1440 பிக்சல் தீர்மானம், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் பயன்பாடுக்கு மிக சௌகரியமான அனுபவத்தை வழங்கும். அதேபோல் அட்ரினோ ஜிபி ஆதரவு மற்றும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் 50 எம்பி கேமராக்கள்

டிரிபிள் 50 எம்பி கேமராக்கள்

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார் + 50 எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என சாதனத்தின் முன்புறத்தில் 32எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை சார்ஜ் செய்வதற்கு என 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகள் வழங்கப்பட்டுள்ளது. சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, என்எஃப்சி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

ரூ.52,999 என்ற விலையில் சியோமி 12 ப்ரோ வாங்குவது என்பது ஒரு சிறந்த முடிவாகும். காரணம் இதில் முதன்மை தர வடிவமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro Gets Massive Discount in india: Right time to buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X