எது Xiaomi 12 Pro மீது ரூ.17,500 தள்ளுபடியா? இப்படி ஒரு டீல் திரும்ப கிடைக்காது ஏன் தெரியுமா?

|

Xiaomi நிறுவனம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், Xiaomi 12 Pro என்ற புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்தது. Xiaomi 12 Pro என்பது நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த Xiaomi 12 Pro சாதனம் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதன் விலை மீது ரூ.17,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Xiaomi 12 Pro போனை வேண்டாம்னு சொல்லவே முடியாது, ஏன் தெரியுமா?

இந்த Xiaomi 12 Pro போனை வேண்டாம்னு சொல்லவே முடியாது, ஏன் தெரியுமா?

இந்த புதிய தள்ளுபடி விலையுடன், இந்த தரமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை எப்போது, எங்கிருந்து வாங்கலாம் என்று தெளிவாகப் பார்க்கலாம். முன்பே சொன்னது போல, இது ஒரு லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலாகும். இது 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இதை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் கூட கிடையாது.

எங்கிருந்து ரூ.17,500 சலுகையுடன் இந்த போனை வாங்கலாம்?

எங்கிருந்து ரூ.17,500 சலுகையுடன் இந்த போனை வாங்கலாம்?

சரி, இப்போது இதை எங்கிருந்து சலுகையுடன் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம். செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் Amazon தளத்தில் நடைபெறும் Amazon Great Indian Festival சேல்ஸ் விற்பனை மற்றும் Mi Store இல் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக் கால விற்பனையின் போது இதை நீங்கள் வெறும் ரூ.45,499 என்ற விலையில் வாங்கலாம். இதன் மூலம் அசல் விலையில் இருந்து சுமார் 28% தள்ளுபடி கிடைக்கிறது.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

இந்தியாவில் இந்த சிப்செட் உடன் கிடைக்கும் மலிவான பிளாக்ஷிப் டிவைஸ் இது தானா?

இந்தியாவில் இந்த சிப்செட் உடன் கிடைக்கும் மலிவான பிளாக்ஷிப் டிவைஸ் இது தானா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், Xiaomi 12 Pro சாதனம் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயங்குகிறது. விலை குறைப்பிற்குப் பிறகு ​​நாட்டில் கிடைக்கும் மலிவான Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் இயங்கும் சாதனமாக சியோமி 12 ப்ரோ மாறுகிறது. இந்த விலைப் புள்ளியில், வேறு எந்த Qualcomm Snapdragon 8 Gen 1 இயங்கும் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் ஒரு அட்டகாசமான ஒப்பந்தமாகும்.

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் 2K குவாலிட்டி உடன் கூடிய 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.73' இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் டால்பி விஷன் மற்றும் HDR10+ போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் கொண்ட 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

Xiaomi 12 Pro போனின் தரமான கேமரா அம்சம்

Xiaomi 12 Pro போனின் தரமான கேமரா அம்சம்

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான சமீபத்திய MIUI 13 உடன் செயல்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS ஆதரவுடன் 50MP Sony IMX707 பிரைமரி சென்சார், 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP போர்ட்ரெய்ட் லென்ஸையும் இது கொண்டுள்ளது. Xiaomi 12 Pro முன்பக்கத்தில் 32MP செல்பி ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

Xiaomi 12 Pro டிவைஸ் 4600mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த பேட்டரி 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவால் ஆதரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Xiaomi ஃபிளாக்ஷிப் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 62,999 ஆகும். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 69,999 ஆக இருக்கிறது.

சரி, இந்த Xiaomi 12 Pro டிவைஸை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

சரி, இந்த Xiaomi 12 Pro டிவைஸை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

உண்மையைச் சொல்லப் போனால், சியோமியின் இந்த லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை வாங்க நீங்கள் தயக்கம் காட்டத் தேவையே இல்லை. காரணம், இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் டாப் நாட்சில் உள்ளது. அனைத்து அம்சங்களும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. குறிப்பாக, தள்ளுபடிக்குப் பிறகு, Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் கிடைக்கும் மலிவு விலை பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருப்பதனால், இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro Flagship Smartphone Gets Massive Discount at Amazon Great Indian Festival Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X