சியோமி உருவாக்கும் 12 மினி ஸ்மார்ட்போன்.. இது ஆப்பிள் ஐபோன் மினிக்கு போட்டியா? பரபரப்பாகும் மினி போன் சந்தை..
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி நிறுவனம் (Xiaomi), இப்போது Xiaomi 12, சியோமி 12 Pro மற்றும் சியோமி 12X ஆகியவற்றைக் கொண்ட அதன் Xiaomi 12 சீரிஸ் தொடருடன் புதிதாக Xiaomi 12 mini என்ற மினி மாடலை ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Xiaomi 12 தொடர் இந்தியாவில் இப்போது வெளியிடப்படவில்லை, மேலும் உற்பத்தியாளரால் எந்த அதிகாரப்பூர்வ இன்டெல்லும் வழங்கப்படவில்லை. சியோமி நிறுவனத்திடம் இருந்து நமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மினி ஸ்மார்ட்போனின் புதிய ரெண்டர் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

சியோமி உருவாக்கும் சியோமி 12 மினி ஸ்மார்ட்போன்
இது, இது வரை சந்தேகிக்கப்பட்ட புரளியை உறுதிப்படுத்தும் தகவலாக மாறியுள்ளது. இதன் மூலம் சியோமி நிறுவனம் Xiaomi 12 mini ஸ்மார்ட்போன் மாடலில் கச்சிதமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை இந்த ரெண்டர் புகைப்படங்கள் காண்பிக்கிறது. சியோமி நிறுவனம் மினி சாதனம் தொடர்பான எந்த தகவலையும் வழங்கவில்லை, ஆனால் ஊகங்கள் Xiaomi 12 mini இன் உலகளாவிய வெளியீட்டைப் பரிந்துரைக்கின்றன. சரி, இப்போது சியோமி 12 மினி ஸ்மார்ட்போன் பற்றி வெளியான விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Xiaomi 12 Mini பற்றிய விவரங்கள்
இந்த சியோமி 12 மினி ஸ்மார்ட்போன் தொடர்பான ரெண்டரை டிப்ஸ்டர் சாம் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது, சியோமி நிறுவனம் ஒரு சிறிய Xiaomi 12 மினி வெர்ஷன் ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது என்பதை காண்பிக்கிறது. கசிந்த ரெண்டர் புகைப்படத்தின் படி, செங்குத்து கேமரா தொகுதியில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் காட்டுகிறது. Xiaomi 12 மினி சாதனத்திற்கான எதிர்காலத் திட்டங்களை பிராண்ட் அறிவிக்கவில்லை என்றாலும், படத்தில் 'Xiaomi 12 Mini' என்று ஒரு வார்த்தை உள்ளதைக் கவனித்தீர்களா?

சியோமி 12 மினி சாதனத்தின் சிப்செட்
இதை வைத்து தான் டிப்ஸ்டர் சாம், இது வரப்போகும் சியோமி 12 மினி சாதனத்தின் ரெண்டர் புகைப்படம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். Xiaomi 12 mini , சந்தையில் அதன் போட்டியாளர்களாக இருக்கும் Asus Zenfone 8 Mini மற்றும் iPhone 13 Mini போன்ற அதே முதன்மை விவரக்குறிப்புகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 12 mini சக்திவாய்ந்த செயலியைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வதந்திகள் உண்மையாக இருந்தால், அது Qualcomm இன் Snapdragon 870 சிப்செட்டாக இருக்கலாம் என்றும் முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Xiaomi 12, 12 Pro மற்றும் 12X உடன் 'அல்ட்ரா'
இந்த சியோமி 12 மினி சாதனம் 6 இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனித்தனியாக, Xiaomi தனது Xiaomi 12 தொடரை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தும். Xiaomi 12, 12 Pro மற்றும் 12X உடன், பிராண்ட் ஒரு 'அல்ட்ரா' மாடலிலும், 'டெரிவேட்டிவ்' Xiaomi 12 Pro மாடலிலும் செயல்படுகிறது. இது Snapdragon 8 Gen1 சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் வரக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

சியோமி 12 மினி சாதனம் ஐபோன் 13 மினிக்கு போட்டியா?
Xiaomi நிறுவனம் Xiaomi 12 mini ஐ அறிமுகப்படுத்தினால், அது கச்சிதமான ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியை அதிகரிக்கும், Asus Zenfone 8 Mini மற்றும் iPhone 13 Mini ஆகியவை ஏற்கனவே பிரபலமான சில தேர்வுகளாக உள்ளன. ஆப்பிள் தற்போது ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 13 மினி என்ற இரண்டு மினி சாதனங்களை வழங்குகிறது. அவை முறையே 5.4 இன்ச் மற்றும் 4.7 இன்ச் டிஸ்ப்ளேகளுடன் வருகின்றன. சாம்சங் போன்ற பிற பிராண்டுகளும் அதன் முதன்மைத் தொடரில் ஒரு மினி சாதனத்தைக் கொண்டிருப்பதாக ஊகிக்கப்படுவதால், மினி ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் மினி சகாப்தம் முடிவடைகிறதா?
சமீபத்தில் வெளியான ஒரு தகவல் ஒட்டுமொத்த ஆப்பிள் ரசிகர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 மினி மாடலுடன், ஆப்பிள் நிறுவனம் அதன் "மினி" ஐபோன் வெர்ஷனை நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் கடைசி மினி ஐபோன் சாதனமாக ஆப்பிள் ஐபோன் 13 மினி இருக்கப்போகிறது என்று பிரபல டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

கம்மி விலையில் ஆப்பிள் போன் வாங்க நிறுவனம் எடுத்த முயற்சி தான் ஐபோன் மினி வெர்ஷனா?
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தை அறிமுகம் செய்து மினி வெர்ஷனை துவங்கியது. இந்த மினி வெர்ஷன் குறிப்பாக கம்மி விலையில் ஆப்பிள் போன் வாங்க விரும்பும் ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்று நிறுவனம் அதன் அறிமுகத்தின் போது கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்ததை விடக் கடந்த ஆண்டு ஐபோன் 12 மினி விற்பனை குறைவாக இருந்தது என்றும், ரசிகர்களிடம் இருந்து மகிழ்ச்சியான பதிலைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் 13 மினி உடன் 'மினி' வெர்ஷனுக்கான சகாப்தம் முடிவடைகிறதா?
ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட ஆப்பிள் ஐபோன் மினி வெர்ஷன் மாடல்களுக்கான விற்பனை மந்தமாகவே இருந்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிடவிருக்கும் புதிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வரிசையில் ஆப்பிள் ஐபோன் 14 மினி சாதனம் இருக்க வாய்ப்பில்லை என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், ஐபோன் 13 மினி உடன் 'மினி' வெர்ஷனுக்கான சகாப்தம் நிறைவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications