Xiaomi 'இதை' செய்யுனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! 1 இல்ல 4 வருது வரிசையா.. புது Xiaomi 12 Lite!

|

Xiaomi நிறுவனம் தொடர்ந்து உலக ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ளது. இதற்கான முக்கிய காரணம், குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் வழங்கி வருவது தான். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சியோமி நிறுவனம் பல்வேறு விலை புள்ளிகளில் பலவிதமான டிவைஸ்களை வாங்க அனுமதிக்கிறது. மலிவு விலை முதல், பிளாக்ஷிப் வரை பல ரகங்களில் ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்து வருகிறது.

Xiaomi 12 Lite போன் வருது.. இறுதியாக ஒப்புக்கொண்டது நிறுவனம்

Xiaomi 12 Lite போன் வருது.. இறுதியாக ஒப்புக்கொண்டது நிறுவனம்

அப்படி, சியோமி நிறுவனத்திடம் இருந்து அடுத்தபடியாக விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் Xiaomi 12 Lite. இந்த டிவைஸ் விரைவில் நிறுவனத்தால் வெளியிடப்படும் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வரை 12 சீரிஸ் வரிசையில் லைட் மாடல் அறிமுகம் செய்யப்படுமா? இல்லையா? என்பது பெரிய புதிராக இருந்து வந்தது. ஒருவழியாக, சியோமி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக 12 Lite போனின் இருப்பை ஒப்புக் கொண்டுள்ளது.

1 இல்ல 4 வரிசையா வரப் போகுது Xiaomi டீஸ்

1 இல்ல 4 வரிசையா வரப் போகுது Xiaomi டீஸ்

கூடுதலாக, டிவிட்டரில் உள்ள இரண்டு டீஸ்ல்கள் மூலம் இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளாக்ஷிப் வரிசையில் உள்ள சியோமி 12 லைட் மாடல், பல்வேறு ஸ்டைலான சாயல்களில் வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சியோமி 12 லைட் டிவைஸ், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய 4 வண்ண விருப்பங்களில் கிடைக்கப் போகிறது என்று Xiaomi ட்வீடில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் கிறீன், பர்பிள், பிங்க் மற்றும் சில்வர் நிறங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?

சியோமி 12 லைட் டிவைஸின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

சியோமி 12 லைட் டிவைஸின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

இப்போது வெளியான தகவலின் படி, வரவிருக்கும் சியோமி 12 லைட் டிவைஸ் குறைந்தது நான்கு கண் கவரும் வண்ண விருப்பங்களுடன் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இத்துடன், இந்த 12 சீரிஸ் மாடலில் ஒரு லைட் வெர்ஷன் மாடல் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இது "featherweight thin design" கேட்ஜெட்டாக அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், எதிர்பார்க்கப்படும் சியோமி 12 லைட் டிவைஸ் மிகவும் ஸ்லிம் ஆக இருக்கும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.

லைட் வெர்ஷனில் 108 MP கேமரா.. 67W பாஸ்ட் சார்ஜிங் இருக்கா?

லைட் வெர்ஷனில் 108 MP கேமரா.. 67W பாஸ்ட் சார்ஜிங் இருக்கா?

இந்த தகவலைத் தவிர்த்து, வரவிருக்கும் புதிய போன் பற்றிய கூடுதல் விரிவான தகவல்கள் எதையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஆரஞ்சு ஸ்பெயினின் போன் பட்டியல் தகவல்படி, இந்த டிவைஸில் 108 MP சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா, 67W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500 mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Xiaomi 12 Lite அறிமுகம் எப்போது?

Xiaomi 12 Lite அறிமுகம் எப்போது?

அறிமுக தேதி பற்றிய தகவல் நம்மிடம் இல்லை என்றாலும் கூட, இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதைக் குறிக்கிறது. சியோமி 12 சீரிஸ் வரிசையில் உள்ள பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அதிக காசு கொடுத்த வாங்க முடியாத Xiaomi ரசிகர்கள், நிச்சயமாக இந்த புதிய Xiaomi 12 Lite மாடலுக்கு செல்லலாம். பிளாக்ஷிப் விலையில் இருந்து இது கணிசமாகக் குறைந்த விலையில் கிடைத்தால், கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்ற நோக்கத்தில் நிறுவனம் இந்த லைட் மாடலை வெளியிடுவது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Lite Will Be Released Soon With Four Colour Options Confirmed Officially

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X