பெயர் தான் லைட்டு, மற்றபடி எல்லாமே வெயிட்டு; Xiaomi 12 Lite அறிமுகம்: விலை, அம்சங்கள்!

|

Mi என்கிற பெயரின் கீழ் இனிமேல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படாது, மாறாக Xiaomi என்கிற பிராண்ட் பெயரிலேயே தான் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று சியோமி நிறுவனம் அறிவித்ததையும், அப்படியாக Mi என்கிற பெயரின் கீழ் கடைசியாக அறிமுகமான ஸ்மார்ட்போன் Mi 11 Lite 5G தான் என்பதையும் நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

குறிப்பாக நீங்களொரு சியோமி அல்லது ரெட்மி ரசிகராக இருந்தால், கண்டிப்பாக மறந்து இருக்க மாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் உங்களில் சிலர் - விற்பனையில் பட்டையை கிளப்பிய - Mi 11 Lite 4G அல்லது 5G மாடல்களை கூட கையில் வைத்து இருக்கலாம்!

"ஆம்" என்றால்.. அப்டேட் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது!

ஏனெனில் சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 'லைட்' சீரிஸ் ஸ்மார்ட்போனாக சியோமி 12 லைட் (Xiaomi 12 Lite) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 11 லைட் மாடலில் இருப்பதை விட மிகவும் வித்தியாசமான வடிவமைப்பின் கீழ் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், அதில் 108 மெகாபிக்சல் மெயின் கேமராவையும் பேக் செய்கிறது மற்றும் ஸ்னாப்டிராகன் 778G SoC-ஐயும் கொண்டுள்ளது.

வேறு என்னென்ன அம்சங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது?

வேறு என்னென்ன அம்சங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது?

கிட்டத்தட்ட 2 வாரங்களாக 'டீஸ்' செய்யப்பட்டு வந்த சியோமி 12 லைட் மாடல் ஆனது மிகவும் எதிர்பார்த்தது போலவே 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகி உள்ளது. மேலும் இது 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,300mAh பேட்டரியையும் வழங்குகிறது.

எடையை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அது தானே ஹைலைட்! இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியான முறையில் வெறும் 7.29மிமீ என்கிற அளவிலான, மிகவும் மெலிதான வடிவமைப்பை பெற்றுள்ளது மற்றும் இதன் எடை வெறும் 173 கிராம் மட்டுமே உள்ளது.

OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!

Xiaomi 12 Lite ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:

Xiaomi 12 Lite ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:

சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி, தோராயமாக ரூ.31,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள 8ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்கள் ஆனது முறையே ரூ.35,600 க்கும் (தோராயமாக) மற்றும் ரூ.39,600 க்கும் (தோராயமாக) வெளியாகி உள்ளது.

எப்போது முதல் இந்திய விற்பனை?

எப்போது முதல் இந்திய விற்பனை?

பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் பிங்க் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சியோமி 12 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனாலும், இது கண்டிப்பாக நாட்டில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எம்ஐ 11 லைட் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகின என்பதால், இதுவும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை!

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

டூயல் சிம் சப்போர்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 உடன் வரும் சியோமி 12 லைட் ஆனது 6.55-இன்ச் அளவிலான அமோஎல்இடி ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2,400 x 1,080 பிக்சல் ரெசல்யூஷன், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர்10+ மற்றும் டால்பி விஷன் போன்றவைகளையும் பேக் செய்கிறது.

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

இது 108எம்பி (சாம்சங் HM2 சென்சார்) மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது சாம்சங் GD2 சென்சார்-ஐ கொண்ட 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஆட்டோஃபோகஸ்-ஐ வழங்கும் இதன் செல்பீ கேமராவானது Xiaomi Selfie Glow அம்சத்தையும் பெறுகிறது என்பது கூடுதல் தகவல்!

78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

பேட்டரி எப்படி?

பேட்டரி எப்படி?

யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி, ப்ளூடூத் வி5.2 மற்றும் வைஃபை 6 போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் 12 லைட் மாடல் ஆனது சிறப்பான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸ்-ஐ வழங்கும் நோக்கத்தின் கீழ் ஒரு ஜோடி ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் டால்பி அட்மோஸ் ஸ்பெஷல் ஆடியோ டெக்னாலஜியையும் பெற்றுள்ளது.

"லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்" ஆக Xiaomi 12 Lite ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Photo Courtesy: Mi.com

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Lite Launched Globally Packs 108 MP Camera SD 778G SoC 4300mAh Battery Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X