எதுக்கு குழப்பம்- சியோமி 12 இப்படிதான் இருக்கும்., அமோக அம்சம் இருக்கு: இதோ கேமரா அமைப்பு!

|

சியோமி அடுத்த ஜென் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. இதையடுத்து சியோமி 12 குறித்து பேசு பொருளாக மாறி வருகிறது. வரவிருக்கும் சியோமி 12 ஸ்மார்ட்போனானது சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி 12எக்ஸ் உடன் இரண்டு மாடல்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சியோமி 12 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி

சியோமி 12 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி

சியோமி 12 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது சியோமி 12-ன் நேரடி படங்கள் ஆன்லைனில் வெளிவந்திருக்கிறது. அதேபோல் இதில் அதன் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கசிந்த நேரடி படம் பின்புற பேனலை காட்டுகிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

வெய்போவில் பகிரப்பட்டது. சியோமி 12-ன் இந்த நேரடி படம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த படம் உண்மையாகும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் கேமரா ஹவுசிங்கில் மைக்ரோஃபோன் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றுக்கான கட்அவுட்களும் இருக்கின்றன.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி

சியோமி 12 ஸ்மார்ட்போனின் நேரடி படம் குறித்து பார்க்கும் போது, முதன்மை சென்சாருக்கான பெரிய கட்அவுட்டை கொண்டிருக்கிறது. அதிக ஒளிக் கதிர்களை பிடிக்க இது அனுமதிக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 குறித்த பரவி வரும் மேலும் தகவல்கள் குறித்து பார்க்கையில், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே உட்பட பல மேம்படுத்தல்களை கொண்டிருக்கிறது. ஹூட்டின் அடிப்படையில், இந்த புதிய சியோமி போன் சக்தி வாய்ந்த அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது சாதனத்தின் சார்ஜிங் நேரத்தை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல் சியோமி 12 வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஸ்னாப்டிராகன் செயலி உடன் வரும் என்பதால் இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இருப்பினும் சியோமி தயாரிப்பில் உருவாக்கி வெளிவரக் காத்திருக்கும் புதிய சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi தனது பட்டியலில் சியோமி 12 என்ற மாடல் பெயர் உடன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் சாதனம் குறித்த பல தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளது. Xiaomi மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தகவல் தயாரிப்பாளர்களிடமிருந்து சாத்தன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய சியோமி 12 வெளியீட்டு தேதி தகவல்

புதிய சியோமி 12 வெளியீட்டு தேதி தகவல்

சியோமியின் புதிய சியோமி 12 சாதனம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Xiaomi 12 ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 898 இல் இயங்கக்கூடும் என்று கடந்த காலங்களில் வெளியான ஒரு முக்கிய தகவல் நம்பகமான டிப்ஸ்டர் வழியாக வெளிப்பட்டது. இது Qualcomm இன் மிக சமீபத்திய சிப்செட் மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான தகவலின் படி, சியோமி தயாரிப்பாளர்கள் Xiaomi 12 ஸ்மார்ட்போன் உடன் Xiaomi 12X என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 12 Images Leaked Online: Might be Launching with Triple Rear Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X