ஜனவரி 19 உறுதி: இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 11டி ப்ரோ 5ஜி- எல்லாமே 120 தான்!

|

சியோமி 11டி ப்ரோ ஜனவரி 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 120 வாட்ஸ் வேக சார்ஜிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் 10-பிட் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சியோமி 11டி ப்ரோ செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலின் இந்திய அறிமுகம் ஜனவரி 19 ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சியோமி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் வரவிருக்கும் சியோமி 11ஐ வெளியீட்டுக்கான டீசரை நிறுத்தி அறிவித்தது. ஆனால் தற்போது டீஸ் செய்யப்பட்டுள்ள ஹைப்பர்ஃபோனின் அதிகாரப்பூர்வ பெயரை நிறுவனம் உறுதிப்படுத்தாமல் இருந்தது.

சியோமி 11டி ப்ரோ 5ஜி இந்திய வெளியீடு

சியோமி 11டி ப்ரோ 5ஜி இந்திய வெளியீடு

இந்த நிலையில் சியோமி 11டி ப்ரோ 5ஜி இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக ஜனவரி 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 120 வாட்ஸ் ஹைப்பர்சார்ஜ் ஆதரவோடு வருகிறது. நிறுவனம் 120 ஹெர்ட்ஸ் 10 பிட் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் அமேசான் மூலமாக பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சியோமி 11டி ப்ரோ விலை விவரங்கள்

சியோமி 11டி ப்ரோ விலை விவரங்கள்

சியோமி 11டி ப்ரோ விலை குறித்து பார்க்கையில், சியோமி 11டி ப்ரோ சாதனத்தின் ஐரோப்பா விலையை ஒப்பிட்டு பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.56,400 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.60700 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.65000 ஆக இருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் பிளாட் 10 பிட் அமோலெட் அமோலெட் ட்ரூ கலர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆதரவோடு 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது. 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெலிமேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது அதோடு இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2 உள்ளிட்ட அம்சத்தோடு வருகிறது.

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி

120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனானது தனித்துவமான விருப்பங்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. அதேபோல் சியோமி 11ஐ சாதனம் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

சியோமி 11ஐ தொடரின் இரண்டு மாடல்களும் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சாதனமானது ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 ப்ரோ + சாதனத்தின் வடிவமைப்பை போன்று இருக்கிறது. சியோமி 11ஐ ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11 ப்ரோ சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹைப்பர் சார்ஜ் 5ஜி விலை

ஹைப்பர் சார்ஜ் 5ஜி விலை

சியோமி 11ஐ ஸ்மார்ட்போனானது ஹைப்பர் சார்ஜ் 5ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,999 எனவும் அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,999 எனவும் இருக்கிறது. அதேபோல் சியோமி 11ஐ 5ஜி மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரிண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26999 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 11T Pro 5G Smartphone Launching Date Confirms on January 19: 120HZ Refresh Rate, 120W Fast Wired Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X