Home
News

வாங்கலாமே தாராளமா- 120W அதீத ஃபாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி கேமரா ஆதரவு: சியோமி 11ஐ, சியோமி 11ஐ 5ஜி அறிமுகம்!

சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனத்தின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை பார்க்கலாம். சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி ஆதரவின் ஆரம்ப விலை ஆனது ரூ.26,999 என இருக்கிறது.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி மற்றும் சியோமி 11ஐ 5ஜி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி மற்றும் சியோமி 11ஐ 5ஜி

சியோமி நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி மற்றும் சியோமி 11ஐ 5ஜி சாதனம் ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனானது தனித்துவமான விருப்பங்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. அதேபோல் சியோமி 11ஐ சாதனம் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. சியோமி 11ஐ தொடரின் இரண்டு மாடல்களும் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சாதனமானது ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 ப்ரோ + சாதனத்தின் வடிவமைப்பை போன்று இருக்கிறது. சியோமி 11ஐ ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11 ப்ரோ சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி, சியோமி 11ஐ 5ஜி இந்தியா விலை

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி, சியோமி 11ஐ 5ஜி இந்தியா விலை

இந்தியாவில் சியோமி 11ஐ ஸ்மார்ட்போனானது ஹைப்பர் சார்ஜ் 5ஜி விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,999 எனவும் அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,999 எனவும் இருக்கிறது. அதேபோல் சியோமி 11ஐ 5ஜி மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரிண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26999 ஆக இருக்கிறது.

ரூ.1500 வரை புத்தாண்டு தள்ளுபடி

ரூ.1500 வரை புத்தாண்டு தள்ளுபடி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி மற்றும் சியோமி 11ஐ 5ஜி சாதனத்தின் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில் இது இந்தியாவில் ஜனவரி 12 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகளில் வாங்கக் கிடைக்கும். சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி மற்றும் சியோமி 11ஐ ஆகிய இரண்டுக்கும் வெளியீட்டு சலுகையாக ரூ.1500 வரை புத்தாண்டு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் எஸ்பிஐ கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் தற்போதுள்ள ரெட்மி நோட் போனை பயனர்கள் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கும் போது ரூ.4000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

சியோமி 11ஐ தொடருடன், சியோமி 120 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் அடாப்டர் காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி விவரக்குறிப்புகளை பார்க்கலாம். இந்த சாதனம் இரட்டை நானோ சிம் ஆதரவு மற்றும் ஆணட்ராய்டு 11 இயக்க ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 360 ஹெர்ட் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் அம்சத்தை கொண்டுள்ளது.

சியோமி அம்சத்தின் கேமரா அம்சங்கள்

சியோமி அம்சத்தின் கேமரா அம்சங்கள்

சியோமி அம்சத்தின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சாதனமானது 16 எம்பி முன்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியை கொண்டுள்ளது இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது 5ஜி, 4 ஜி எல்டிஇ, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

டால்பி அட்மாஸ் மற்றும் ஹை ரெஸ் ஆடியோ சான்றிதழ்

டால்பி அட்மாஸ் மற்றும் ஹை ரெஸ் ஆடியோ சான்றிதழ்

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி ஆனது டால்பி அட்மாஸ் மற்றும் ஹை ரெஸ் ஆடியோ சான்றிதழ்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் டூயல் பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இதில் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தின் மூலம் 15 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்யலாம். சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனானது 5160 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 11i and xiaomi 11i 5G Hypercharge Smartphone Launched with 120W Fast Charging, 108MP Primary Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X