Home
News

சியோமி அறிமுகம் செய்த ஸ்பெஷல் எடிஷன் பாக்கெட் பவர் பேங்க்! என்ன ஸ்பெஷல்? என்ன விலை?

டிஸ்னியின் 100வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, டிஸ்னியுடன் இணைந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிஷன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் தற்போது 10000mAh திறன் கொண்ட புதிய பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்னி தனது 100வது அனுவல் லிமிடெட் எடிஷன் பில்ட் இந்த கேபிள் பவர் பேங்க் (Disney 100th Anniversary Limited Edition Built-in Cable Power Bank) சாதனத்தை வெளியிட்டது. சியோமி நிறுவனம் ஆன்லைன் ஸ்டோரில் முன்கூட்டிய ஆர்டருக்கு இதை கிடைக்க செய்துள்ளது. இந்த பவர் பேங்க், உலக புகழ்பெற்ற மிக்கி மவுஸு படத்துடன் வருகிறது.

சியோமி அறிமுகம் செய்த ஸ்பெஷல் எடிஷன் பாக்கெட் பவர் பேங்க்!

இந்த பவர் பேங்க் சாதனம் மிக்கி மவுஸ் உடன் கூடிய சியோமி சிவி 3 ஸ்பெஷல் எடிஷன் சாதனத்துடனும் அறிமுகமாகியுள்ளது. கார்ட்டூன் கதாபாத்திரத்தின் விளையாட்டுத்தனமான சாரத்தை படம்பிடித்து, டிஸ்னி இன் மிக்கி மவுஸை நினைவூட்டும் வகையில், கருப்பு மற்றும் சிவப்பு வடிவமைப்புடன் இந்த பவர் பேங்க் சாதனம் அறிமுகமாகியுள்ளது. இது சில தனித்துவமான அம்சங்களுடன் வருகிறது.

இது ஒரு பாக்கெட் பிரெண்ட்லி பவர் பேங்க் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்மார்ட்போன்களின் சார்ஜிங் சிக்கல்களுக்கு தீர்வாக அமைகிறது. சியோமி, 10000mAh பாக்கெட் எடிஷன் பவர் பேங்கின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் உள்ளமைக்கப்பட்ட டைப்-C போர்ட் உடன் கூட 22.5W டூயல் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய கேபிள் உடன் வருகிறது. இது கூடுதல் கேபிளை எடுத்துச் செல்வதற்கான தேவையை நீக்குகிறது.

உங்கள் நீண்ட தூரத்து பயணத்தின்போது தொந்தரவு இல்லாத சார்ஜிங்கை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் சிறப்பானது. இந்த பவர் பேங்க் சாதனம் 10000mAh திறன் கொண்டது. இது பல்வேறு சாதனங்களை பல முறை சார்ஜ் செய்ய உதவுகிறது. உதாரணமாக, இது Xiaomi 13 1.7 முறையும், Redmi K60 Pro 1.4 முறையும், iPhone 14ஐ இரண்டு முறையும், 1.1 முறை ஸ்விட்ச் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

இந்த பவர் பேங்க் ஐபோன்களுக்கு அதிகபட்சமாக 20W சார்ஜிங் ஆற்றலை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பவர் பேங்கை ஐபோன்களுடன் இணைக்க, ஐபோன்கள் பயன்படுத்தும் லைட்னிங் போர்ட் காரணமாக C முதல் L டேட்டா கேபிள் தேவைப்படுகிறது. Xiaomi 10000mAh Pocket Edition Power Bank ஆனது USB-A போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு போர்டும் 22.5W அதிகபட்ச வெளியீட்டு சக்தியை ஆதரிக்கிறது.

இது மூன்று சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டிய பயனர்களுக்கு இது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இந்த பவர் பேங்கில் லோ-வோல்ட்டேஜ் சிக்கலை தவிர்க்க உதவும் பாதுகாப்பு முறையும் உள்ளது. இது பவர் செக் பட்டனை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் செயல்படுத்தப்படும். குறைந்த பேட்டரி அளவு கொண்ட சிறிய சாதனங்களை புதுப்பிக்க இந்த பயன்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, Xiaomi 10000mAh பாக்கெட் எடிஷன் பவர் பேங்க், ஷார்ட் சர்க்யூட்டுகள், ஓவர்வோல்டேஜ், ஓவர் கரண்ட், ஓவர் சார்ஜ் மற்றும் ஓவர்-டிஸ்சார்ஜ் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான கையடக்க சக்திக்காக பயனர்கள் இந்த பவர் பேங்கை வாங்கலாம். இந்தியாவில் இதன் வருகை உறுதியாகவில்லை. சீனாவில் இதன் விலை 199 யுவான் ஆகும்.

இந்திய மதிப்பில் இது ரூ.2,301 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்பெஷல் எடிஷன் சாதனம் என்பதனால், இது இந்தியாவில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 10000mAh Disney 100th Anniversary Limited Edition Pocket Power Bank Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X