Home
News

சர்வாதிகார ஆட்சியா?- சீன அதிபர் ஜிங்பிங்கின் அதிர்ச்சி தரும் உண்மைகள்: அடுத்த ஹிட்லர் இவரா?

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக வாழ்ந்துவந்த ஹிட்லரின் அதே பாதையை சீனா அதிபர் ஜின்பிங் அப்படியே பின்பற்றி வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹிட்லருடைய செயல்பாடுகள் போலவே ஜின்பிங்கின் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக ஒற்றுமையாக உள்ளது என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சர்வாதிகாரியாக வலம் வந்த ஹிட்லர்

சர்வாதிகாரியாக வலம் வந்த ஹிட்லர்

ஜெர்மனி மட்டுமின்றி உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகள் தனது கட்டுப்பாட்டிற்குள் ஹிட்லர் எப்படி ஆட்டிப்படைத்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது, இவரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அது அவரின் கொடியை போலவே முழுமையாகச் சிவப்பாகவே இருக்கிறது. சர்வாதிகாரியாக வலம் வந்த ஹிட்லரைப் போலவே, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் சர்வாதிகாரியாக உருவெடுக்கத் துவங்கியுள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹிட்லர் போல சீன அதிபர் ஜிங்பிங்

ஹிட்லர் போல சீன அதிபர் ஜிங்பிங்

ஹிட்லர் தனது நாட்களில் மேற்கொண்ட அதே அரசியல் திட்டங்களையும், சட்டங்களையும் மற்றும் அவரின் நடவடிக்கைகளையும், அப்படியே சீன அதிபர் ஜிங்பிங் பின்பற்றுகிறார் என்பது இந்தப் பதிவில் விளக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் கோட்பாடுகளை அப்படியே ஜிங்பிங் பின்பற்றியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹிட்லர் போலவே ஜிங்பிங் அரசியலுக்கு வந்ததும் மக்களையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.

ஹிட்லருக்கும், சீனா அதிபர் ஜிங்பிங்கிற்கும் பல ஒற்றுமைகள்

ஹிட்லருக்கும், சீனா அதிபர் ஜிங்பிங்கிற்கும் பல ஒற்றுமைகள்

அதன்பின், அவர் பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அப்படியே ஒரே மாதிரியாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லர் ஜெர்மனியில் நடத்திவந்த சர்வாதிகார ஆட்சி, யூதர்கள் மீதான தாக்குதல் எல்லாம் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக மாறியது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், உலகப் போருக்குக் காரணமாக இருந்த ஹிட்லருக்கும், சீனா அதிபர் ஜிங்பிங்கிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

ஹிட்லர் மற்றும் ஜிங்பிங் அரசியல் பயணம்

ஹிட்லர் மற்றும் ஜிங்பிங் அரசியல் பயணம்

ஹிட்லர் மற்றும் ஜிங்பிங் ஆகிய இருவரின் அரசியல் பயணம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. 1929 முதல் 1932 ஆகிய கால கட்டத்தில், ஜெர்மனி பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்தது. இதன் காரணமாக மக்கள் வீதிக்கு வந்தனர், வேலைவாய்ப்பு இல்லாமல் பலரையும் வறுமை வாட்டியது. இதற்குக் காரணம் யூதர்கள் தான் என்று பிரச்சாரம் செய்த ஹிட்லர், பொருளாதார சரிவிலிருந்து மக்களை மீட்டு, யூதர்களிடம் இருந்து விடுதலை கொடுக்கிறேன் என்ற உத்தரவாதத்துடன் ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்லர் போலவே ஆட்சியைப் பிடித்த ஜிங்பிங்

ஹிட்லர் போலவே ஆட்சியைப் பிடித்த ஜிங்பிங்

இதேபோல் தான் 2007 முதல் 2009 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுக்க பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. சீனாவின் மோசமான பொருளாதார சரிவு காரணமாக அங்கு நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டது. இந்தப் பொருளாதாரச் சரிவிலிருந்து மக்களை மீட்பேன் என்ற சத்தியத்துடன் ஹிட்லர் போலவே ஜிங்பிங் சீனாவில் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்பதே உண்மை.

அரசியல் எதிரிகளைக் கைது செய்து கொலை செய்த ஹிட்லர்! ஜிங்பிங் என்ன செய்தார்?

அரசியல் எதிரிகளைக் கைது செய்து கொலை செய்த ஹிட்லர்! ஜிங்பிங் என்ன செய்தார்?

ஹிட்லர் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் தனக்கு எதிராக இருந்த அரசியல் எதிரிகளைக் கைது செய்து அவர்களைக் கொலையும் செய்ய உத்தரவிட்டார். அதேபோலத்தான் 2014 முதல் 2017 வரை சீனாவில் தனக்கு எதிராகச் செயல்பட்ட பல அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஜிங்பிங் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். இது போன்று இன்னும் பல நம்பமுடியாத ஒற்றுமைகள் ஹிட்லருக்கும் ஜின்பிங்கிற்கும் உள்ளது.

மக்களையும் இராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலைவர்கள்

மக்களையும் இராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலைவர்கள்

1933 முதல் 1934 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியிலிருந்த போலீஸ், ராணுவம் என்று அனைத்து துறைகளையும் ஹிட்லர் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சீனாவின் அனைத்துப் படைகளையும் ஹிட்லர் போலவே, ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடங்கள் மாறினாலும் செயல்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதே உண்மை.

இனி எல்லாமே நான் மட்டும் தான்!

இனி எல்லாமே நான் மட்டும் தான்!

1934 முதல் 1935 ஜெர்மனியின் அனைத்து அதிகார மையங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஹிட்லர், ராணுவ தளபதி, பிரதமர் என்று அனைத்து பதவிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சர்வாதிகாரியாக உருவமெடுத்தார் ஹிட்லர், அவர் தான் எல்லாம் என்று அறிவித்தார். அதேபோன்று தான் 2014 முதல் 2018 சீனாவின் அனைத்து உச்சபட்ச அதிகாரங்களையும் ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். நாட்டின் ஒரே தலைவர் நான் தான் என்று வெளிப்படையாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மையமே நான்தான்

சீனாவின் மையமே நான்தான்

1935 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஒரே தலைவர் நான் தான், எல்லோரும் எனக்கு மட்டும்தான் கட்டுப்பட வேண்டும் என்று ஹிட்லர் வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக ஹேயில் ஹிட்லர் வாசகம் கூட உருவாக்கப்பட்டது. அதேபோல் 2017 ஆம் ஆண்டு ஜிங்பிங் சீனாவின் மையமே நான்தான் என்று அறிவித்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

படையைப் பலப்படுத்தியதிலும் ஒற்றுமையா?

படையைப் பலப்படுத்தியதிலும் ஒற்றுமையா?

1935 இல் போருக்குத் தேவையான அனைத்துப் படைகளையும் ஹிட்லர் தயார்ப்படுத்தி வந்தார், ஜெர்மனியின் விமான படை பலம் என்பது பிரிட்டனின் விமானப்படை பலத்தை முந்தியது. இதேபோல் ஜிங்பிங் 2013 ஆம் ஆண்டிலிருந்து போருக்கு தயாராகும் வகையில் தனது படையைப் பலப்படுத்தி வருகிறார். சீனாவின் கடற்படை, அமெரிக்காவின் கடற்படை பலத்தை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்லர் போல் அத்துமீறி படையெடுத்து ஆக்கிரமிப்பு

ஹிட்லர் போல் அத்துமீறி படையெடுத்து ஆக்கிரமிப்பு

1935 இல் ஹிட்லர் தனது படையை சார்லேண்ட் ரயின்லேண்ட் ஆகிய சுதந்திர பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி ஆக்கிரமிப்புச் செய்தார். அதேபோல் 2015ல் ஜிங்பிங் தனது பிஎல்ஏ படைகளை ஸ்பார்டல்லி தீவிற்கு அனுப்பி அந்தப்பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றினார். 2020ல் ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தார். 1938-ல் ஆஸ்திரேலியாவை ஜெர்மனியுடன் ஹிட்லர் இணைத்தார், அதேபோல கொஞ்சமும் மாற்றமின்றி 2019 ஆம் ஆண்டு தாய்வானை சீனாவுடன் இணைப்பதாக ஜிங்பிங் அறிவித்தார்.

2020ல் சீன படைகளின் ஆக்கிரமிப்பிறகும் ஹிட்லருடன் ஒற்றுமை

2020ல் சீன படைகளின் ஆக்கிரமிப்பிறகும் ஹிட்லருடன் ஒற்றுமை

1938 முதல் 1939 வரை ஜெர்மனியின் அருகிலுள்ள அண்டை நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இதற்குக் காரணமாக அந்த நாடுகள் வரலாறு ரீதியாக ஜெர்மனிக்கு தான் சொந்தம் என்று கூறி, அவர் அண்டை நாடுகள் மீது படையெடுக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2019 முதல் 2020ல் பூட்டான், இந்தியா, நேபாளம், வங்கதேசம் என்று பல நாடுகளின் இடங்களைச் சீனாவின் படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஹிட்லர் போல ஜிங்பிங் நில ஆக்கிரமிப்பில் இறங்கியது வெளிப்படையாக உறுதியானது.

இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா?

இப்படி ஹிட்லரின் பாதையை சீன அதிபர் தெரிந்தோ, தெரியாமலோ அப்படியே பின்பற்றி வருகிறார். இது இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று வரலாற்று ஆய்வாளர்கள் குழம்பியுள்ளனர். குறிப்பாக கொரோனா பரவலுக்கு சீனா தான் முக்கிய காரணம் என்று அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது. இது ஒரு உயிரியல் போர் என்று சில நாடுகள் நம்புகின்றனர். சீனா அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முயல்வதாகவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒரு சர்வாதிகாரி

மீண்டும் ஒரு சர்வாதிகாரி

இதனால் மீண்டும் ஒரு சர்வாதிகாரி முளைத்து விடக்கூடாது என்பதற்காகவே சீனாவின் ஆட்டத்தை உலகின் பல்வேறு நாடுகளில் அடக்க முயன்று வருகின்றனர். இதற்காக சில அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகள் அனைத்தும் ஸ்டார் நியூ கிலோபல் என்ற யூட்யூப் பக்கத்தின் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நீக்கும்படி இந்தியாவில் இருக்கும் சீன தூதரகம் புகார் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xi-Tler? Xi Jinping Similarities With World's Most Ruthless Dictator Of All Time Adolf Hitler : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X