WhatsApp கதை முடிந்தது.. XChat-ஐ இறக்கிய எலான் மஸ்க்.. வாய்ஸ், வீடியோ, ஃபைல் ஷேரிங்.. எக்ஸ் இன்டிகிரேஷன்!
எலான் மஸ்கின் எக்ஸ் கார்ப். (X Corp.) நிறுவனமானது, வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சிக்னல் (Signal) போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு போட்டியாக எக்ஸ்சாட் (XChat) ஆப்பை களமிறக்கி இருக்கிறது. ஆரம்பமே எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டெட் (end-to-end encrypted) புரொடெக்சன் கொடுத்துள்ளதால், வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எக்ஸ்சாட் ஆப் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களில் ஃபைல் ஷேரிங், ஆடியோ, வீடியோ கால்கள் மற்றும் குரூப் சாட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களையும் கொடுத்து வாட்ஸ்அப் ஆப் கொடிகட்டி பறந்துவருகிறது. இதற்கு போட்டியாக சிக்னல், அரட்டை போன்ற பல்வேறு ஆப்கள் வந்தாலும், ஈடுகொடுக்க முடியவில்லை. இப்போது, போட்டியில் எக்ஸ்சாட் குதித்துள்ளது.

எலான் மஸ்கின் எக்ஸ் கார்ப் நிறுவனத்தின் புரொடெக்ட்டாக இருப்பதால், இதை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. ஏனென்றால், எக்ஸ் (X) தளத்தின் யூசர்களை எளிதாக எக்ஸ்சாட் ஆப்புக்கு மாற்றிவிட முடியும். இதனாலேயே தனி கவனம் பெற்றுள்ளது. ஆரம்பமே எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டெட் புரொடெக்சனை கொடுத்து, யூசர்களையும் தட்டி தூக்கி இருக்கிறது.
ஐஓஎஸ் மெசேஜிங் ஆப்
இந்த எக்ஸ்சாட் ஆப், ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஐபோன் யூசர்கள் ஆப் ஸ்டோரில் (App Store) டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஐபாட் யூசர்களும் கிடைக்கிறது. இதில் விளம்பரங்கள் கிடையாது. அதேபோல டிராக்கிங் கிடைக்கிறது.
ஆகவே, யூசர்கள் நம்பி டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம் என்பதை எக்ஸ் கார்ப். சொல்ல வருகிறது. மெசேஜிங் மட்டுமல்லாமல், ஃபைல் ஷேரிங், ஆடியோ, வீடியோ கால்கள் மற்றும் குரூப் சாட் போன்ற தனிப்பட்ட விவரங்கள் அடங்கி இருப்பதால், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் எக்ஸ் கார்ப். கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.
ஏனென்றால், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டெட் மற்றும் பின் நம்பர் புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, இந்த எக்ஸ்சாட் ஆப் வழியாக பகிரப்படும் தகவல்கள் மற்றும் டேட்டாக்கள் அனுப்பியவர் மற்றும் பெறுபவருக்கு மட்டுமே தெரியும். வேறு யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே, வாட்ஸ்அப் ஆப்பில் இருக்கும் ஒட்டுமொத்த பீச்சர்களும் இருக்கிறது.
எக்ஸ் அக்கவுண்ட் இன்டிகிரேஷன்
ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து பயன்படுத்தும்போது, எக்ஸ் அக்கவுண்ட் இன்டிகிரேஷன் (X Account Integration) செய்து கொள்ளலாம். ஆகவே, தனியாக விவரங்களை கொடுப்பது மற்றும் வெரிபிகேஷன் செய்வது குறைகிறது. இதனாலேயே எளிதாக இந்த எக்ஸ்சாட் ஆப் யூசர்களிடம் சென்று சேர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
எக்ஸ்சாட் பீச்சர்கள்
1. எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டெட் மெசேஜிங்
2. விளம்பரங்கள் மற்றும் டிராக்கிங் கிடையாது.
3. மெசேஜ்களை எடிட் மற்றும் டெலிட் செய்து கொள்ளலாம்.
4.டிஸ்அப்பியரிங் மேசேஜ் மற்றும் யூசர் கன்ட்ரோல் கிடைக்கும்
5. போட்டோ, வீடியோ மற்றும் ஃபைல்களை ஷேர் செய்து கொள்ளலாம்.
6. குரூப் சாட் மற்றும் மல்டிபிள் மெம்பர்களை சேர்க்கலாம்.
7. ஸ்கிரீன் ஷாட் பிளாக் உள்ளிட்ட கூடுதல் பிரைவசி கிடைக்கும்.
ஐபோன் மற்றும் ஐபாட் யூசர்கள் வழக்கம்போல ஆப் ஸ்டோரில் இந்த எக்ஸ்சாட் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். எக்ஸ் கார்ப். நிறுவனத்தின் எக்ஸ்சாட் ஆப்பை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும். எக்ஸ் அக்கவுண்ட் இருந்தால், எளிதாக இன்டிகிரேஷன் செய்து, அதே விவரங்களுடன் இந்த எக்ஸ்சாட் ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications