எக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா? வியக்க வைக்கும் ஒப்பந்தம்..

|

தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டணி வைத்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முதல் முறையாக அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட க்ரிஸ்பி கிரீம் என்ற பேக்கிங் உணவக நிறுவனம் முதல் முறையாக எக்ஸ்பாக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த உணவாக நிறுவனம் இப்போது முதல் முறையாக புதிய வடிவிலான டோனட் உணவை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

எக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா?

க்ரிஸ்பி கிரீம் மற்றும் எக்ஸ்பாக்ஸ் நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து தற்பொழுது முதல் முறையாக லிமிடெட் எடிஷன் டோனட் உணவை அறிமுகமாகிறது. லிமிடெட் எடிஷன் டோனட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் வரும் ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பே, இந்த புதிய டோனட்கள் இம்முறை எக்ஸ்பாக்ஸ் வெளியாகி 20 வது ஆண்டு விழாவை முன்னிட் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எக்ஸ்பாக்ஸ் லிமிடெட் எடிஷன் டோனட் கேக் ஆகஸ்டு 22 வரை வாடிக்கையாளர்களுக்கு வாங்குவதற்குக் கிடைக்கும். இது குறித்த முழு விபரங்களை க்ரிஸ்பி கிரீம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளது. க்ரிஸ்பி கிரீம் நிறுவனம் முதல் முறையாக வியாபார ரீதியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் எக்ஸ்பாக்ஸ் ஏற்கனவே இதுபோன்ற கூட்டணி அமைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லிமிடெட் எடிஷன் டோனட் நிறுவனத்தால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட பஞ்சுபோன்ற மாவைக் கொண்டு ரிச்சான மற்றும் கூயி பிரவுனி உடன் தயாரிக்கப்படுகிறது. ஐசிங்கில் நனைக்கப்பட்டு எக்ஸ்பாக் சின்னமான எக்ஸ் வார்த்தையின் லோகோவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. என்று கிரிஸ்பி கிரெமின் நெக்ஸஸ் லெவல் டோனட் பற்றிய விளக்கத்தை நிறுவனத்தின் ட்வீட்.காட்டுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Xbox Krispy Kreme Partner for Limited Edition Doughnuts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X