இறங்கி அடித்த எலான் மஸ்க்.. ஆண்ட்ராய்டு டிவிகளில் X TV app.. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டார். அதாவது இந்த டிவிட்டர் தளத்திற்கு எக்ஸ் என்று பெயரிட்டு பல்வேறு புதிய வசதிகளை இதில் கொண்டுவந்துவிட்டார். இந்நிலையில் ஸ்மார்ட் டிவிகளில் கூட இந்த எக்ஸ் தளம் வரத்தொடங்கியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஒடிடி (OTT) ஆப்ஸ்களை போலவே இந்த எக்ஸ் தளத்தை ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எக்ஸ் டிவி ஆப்-இன் பீட்டா பதிப்பு (X TV app beta version) தற்போது ஆண்ட்ராய்டு டிவிக்காக
வெளியிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார் எலான் மஸ்க். விரைவில் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் டிவி ஆப் அறிமுகமானதும் அனைத்து டிவிகளிலும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் எல்ஜி, அமேசான் ஃபயர் டிவி மற்றும் கூகுள் டிவி சாதனங்களில் இந்த ஆப் வசதியைப் பயன்படுத்த முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த எக்ஸ் டிவி ஆப் ஆனது ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த எக்ஸ் டிவி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உள்ளூர் செய்திகள், விளையாட்டு, திரைப்படம், இசை மற்றும் வானிலை சேனல்கள் அனைத்தையும் இந்த எக்ஸ் டிவி ஆப் மூலம் விரைவில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ரீப்ளே டிவி (Replay TV) எனும் அம்சம் இந்த ஆப் வசதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தவறவிட்ட நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடியும். எக்ஸ்-ஸ்ட்ரீம் சர்வீசஸ் கிளவுட்டில் 72 மணிநேர நிகழ்ச்சிகளைச் சேமிக்க முடியும். எனவே உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.
இதுதவிர ஸ்டார்ஓவர் டிவி (Startover TV), ஃப்ரீ கிளவுட் டிவிஆர் (Free Cloud DVR) போன்ற அம்சங்களுடன் இந்த எக்ஸ் டிவி ஆப் வசதியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ் டிவி ஆப் பீட்டா பதிப்பில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்கப் பயனர்கள் எகஸ் தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் முன்பு கூறியபடி இந்த எக்ஸ் டிவி ஆப் ஆனது தற்போது ஸ்மார்ட் டிவிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஆப் வசதிக்குச் சந்தா செலுத்துவது குறித்து இன்னும் தகவல் வெளியிடவில்லை. குறிப்பாக இந்த எக்ஸ் டிவி ஆப்-இன் அதிகாரப்பூர்வ அறிமுக தேதியில் இதன் சந்தா குறித்து தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏற்கனவே வெளியான தகவலின்படி, டிரெண்டிங் வீடியோ அல்காரிதம், ஏஐ (AI) டெக்னாலஜி, மேம்படுத்தப்பட்ட வீடியோ தேடல், விரைவாக கண்டறியும் வசதி, எளிமையான கேஸ்டிங் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த டிவி எக்ஸ் டிவி ஆப் வசதியில் உள்ளது.
ஆனாலும் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பல ஓடிடி தளங்களுக்கு இந்த எக்ஸ் டிவி ஆப் ஆனது மிகப் பெரிய போட்டியாக இருக்கும். குறிப்பாக எக்ஸ் டிவி ஆப்-க்கு அனைத்து நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: indiatoday.in


Click it and Unblock the Notifications








