Block பண்ணாலும் Post பாக்கலாம்.. எலான் மஸ்க்கின் அடுத்த மாற்றம்.. X தளத்துல வருது.. அப்போ, மெசேஜ் அனுப்பலாமா?
உங்கள பிளாக் பண்ண அக்கவுண்ட்ல இருந்து என்னென்ன போஸ்ட் வருதுனு பாக்க படாதபாடுபட்டிருப்பீங்க. வேற ஒரு அக்கவுண்ட், நண்பர்கள் அக்கவுண்ட்னு ஓப்பன் பண்ணி அதை செஞ்சிருப்பீங்க. ஆனால், இனிமே அதுக்கு வேலை இல்ல, எக்ஸ் தளத்தின் உரிமையாளரும் பில்லியனருமான எலான் மஸ்க் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். இனிமேல் எக்ஸ் தளத்தில் பிளாக் செய்யப்பட்டாலும், போஸ்ட்களை பார்க்கலாம். இந்த புதிய பீச்சர் மூலம் மேசேஜ் அனுப்ப முடியுமா? அனைத்து போஸ்ட்களையும் பார்க்க முடியுமா? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கோடிக்கணக்கான யூசர்கள் பயன்படுத்தும் எக்ஸ் (X) தளமானது, எலான் மஸ்க் கைக்கு சென்ற பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. யூசர்கள்கூட எதிர்பார்த்திராக பீச்சர்களும் எக்ஸ் தளத்தில் வருவது வழக்கமாகி விட்டது. இப்போது, பிளாக் செய்யப்பட்ட யூசர்கள் அறக்க பறக்கும்படியான புதிய பீச்சர் வந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட பிளாக் பீச்சரை இன்ஆக்டிவ் செய்வதுபோலத்தான்.

ஆனால், அதிலும் தனியுரிமையை மதிக்கும்படி கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதாவது, எக்ஸ் தளத்தில் ஒருவரை நீங்கள் பிளாக் செய்துவிட்டால், அவர்களுக்கு உங்களது ப்ரொபைல் மற்றும் போஸ்ட் காண்பிக்கப்படாது. அதேபோல மேசேஜ் செய்வது இயலாத காரியம். ஆனால், இப்போது எலான் மஸ்க் கொண்டுவந்திருக்கும் பீச்சர் மூலம் போஸ்ட்களை பார்க்க முடியும்.
அதாவது, பப்ளிக் போஸ்ட்களை (Public Posts) மட்டும் பார்க்கலாம். வழக்கமாக போஸ்ட்களை பார்க்கும்படி அதுவும் உங்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால், அவர்களின் ப்ரொபைல் விவரங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படாது. அதேபோல மேசேஜ் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. அப்போது, நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் (You're Blocked) என்பது மட்டுமே தெரியும்.
ஆகவே, போஸ்ட்களுக்கு ரிப்ளை செய்ய முடியாது. அதேபோல கமெண்ட்களையும் செய்ய முடியாது. மேலும், பாலோயர்கள் மற்றும் பாலோயிங் லிஸ்ட் உள்ளிட்டவற்றையும் பார்க்க முடியாது. இதுகிட்டத்தட்ட முன்பே வந்த பீச்சராகும். அதாவது, லாக்-அவுட் செய்தாலும், வேறு அக்கவுண்ட்டை லாகின்-இன் செய்தாலும் பிளாக் செய்தவர்களின் அக்கவுண்ட்டை பார்க்க முடியும்.
ஆனால், போஸ்ட்களில் கமெண்ட் செய்வது, மேசேஜ் அனுப்புவது போன்றவற்றை செய்ய முடியாது. அதேபோல அவர்களது அக்கவுண்ட்டை குறிப்பிட்ட போஸ்ட்களுக்கு மேல் ஸ்க்ரோல் செய்தாலும், உங்களை லாகின் செய்ய எக்ஸ் தளம் கேட்டுக் கொள்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட இந்த பீச்சரின் அப்டேட் அல்லது இதற்கு பதிலாகவே மேற்கண்ட புதிய பீச்சர்கள் வந்திருக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பீச்சர்கள் பிளாக் செய்யப்பட்டவர்களுக்கு பப்ளிக் போஸ்ட்களை மட்டுமே காண்பிப்பதால், யூசர்களின் தனியுரிமைக்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது. இருப்பினும், தவிர்க்க நினைக்கும் நபர்கள் அவர்களது போஸ்ட்களை பார்க்க அனுமதி வழங்குவதும் சிலருக்கு நெருடலாக இருக்கலாம். ஆனால், லாகின் செய்யாமலேயே பப்ளிக் போஸ்ட்களை பார்க்க முடிகிறது.
ஆகவே, இந்த புதிய பீச்சரால் தனியுரிமைக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பதே உண்மை. எலான் மஸ்க் இந்த பீச்சர் குறித்து அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது நடக்க அதிக நேரம் பிடித்தது. பிளாக் ஃபங்ஷன் ஒரு அக்கவுண்ட்டை மற்றவர்களின் தொடர்பில் இருந்து தடுக்கும். ஆனால், இப்போது, பப்ளிக் போஸ்ட்களை பார்ப்பதில் இருந்து தடுக்காது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய பீச்சர் விரைவில் அப்டேட் மூலம் யூசர்களுக்கு கிடைக்க இருக்கிறது. வரும் நாட்களில் வெளியாகலாம். ஆகவே, எக்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவிட்டு இந்த புதிய பீச்சர்களை யூசர்கள் பயன்படுத்தி பார்க்கலாம். பிளாக் செய்தவர்களின் பப்ளிக் போஸ்ட்கள் உங்களுக்கு காண்பிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








