WWDC 2025: நெக்ஸ்ட் லெவலில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்.. லைவ் டிரான்ஸ்லேஷன்.. இமேஜ் பிளேகிரவுண்ட்.. மேலும் இருக்கு!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு 2025 (WWDC 2025) இவென்ட்டில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) பீச்சர்களில் பல்வேறு அப்கிரேட்கள் மற்றும் சில புதிய பீச்சர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஆகிய ஒட்டுமொத்த டிவைஸ்களிலும் இந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸை அனுகலாம். லைவ் டிரான்ஸ்லேஷன், விசுவல் இன்டெலிஜென்ஸ் அப்டேட்ஸ், இமேஜ் பிளேகிரவுண்ட் மற்றும் ஜென்மோஜி என்ஹான்ஸ்மெண்ட், வொர்க்அவுட் பட்ட்டி போன்றவற்றில் என்னென்ன மாறி இருக்கிறது?
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புதிய கேபபலிட்டிகள் (Apple Intelligence New Capabilities)
- லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation)
- ஜென்மோஜி மற்றும் இமேஜ் பிளேகிரவுண்ட் (Genmoji & Image Playground)
- விசுவல் இன்டெலிஜென்ஸ் (Visual Intelligence)
- வொர்க்அவுட் பட்ட்டி (Workout Buddy)
- ஆன்-டிவைஸ் மாடல் (On-Device Model)

லைவ் டிரான்ஸ்லேஷன்:
இந்த பீச்சர் மூலம் மெசேஜ், பேஸ்டைம் மற்றும் போன் கால்களை பல்வேறு மொழிகளில் லைவ் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். இதில் டெக்ஸ்ட், வாய்ஸ் ஆகியவை ரியல்-டைமில் டிரான்ஸ்லேட் செய்யப்படும். நீங்கள் மெசேஜ் மூலம் உங்களது மொழியில் டைப் செய்தாலும், அதை பெற வேண்டியவரின் மொழிக்கு லைவ்வாக டிரான்ஸ்லேட் செய்யப்படும்.
அதேபோல வாய்ஸ் கால்கள் அல்லது வீடியோ கால்களில் ரியல் டைமில் ஒரு மொழியில் இருந்து மாற்றொரு மொழிக்கு டிரான்ஸ்லேட் செய்து உரையாடலை மேற்கொள்ளலாம். இதற்காக எந்தவொரு கூடுதல் டிரான்ஸ்லேஷன் ஆப் தேவையில்லை. உங்களது ஆப்பிள் டிவைஸ்களிலேயே அனுக கிடைக்கும். அதேபோல உங்களது டேட்டாக்கள் பிரைவசியாக பாதுகாக்கப்படும்.

ஜென்மோஜி மற்றும் இமேஜ் பிளேகிரவுண்ட்:
ஜென்மோஜி பீச்சரில் மேலும் சில அப்கிரேட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, டெக்ஸ்ட்டை டைப் செய்து ஈமோஜிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அந்த ஈமோஜிகளை மிக்ஸ் செய்து இனிமேல் புதிய ஈமோஜிகளாகவும் மாற்ற முடியும். அதேபோல இமேஜ் பிளேகிரவுண்ட் பீச்சரில் புதிய ஸ்டைல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுவும் சாட்-ஜிபிடி (ChatGPT) மூலம் ஜென்ரேட் செய்து கொள்ளலாம். ஆகவே, இமேஜ் பிளேகிரவுண்ட் மூலம் நீங்கள் கொடுக்கும் டிஸ்கிரிப்ஷன் அல்லது போட்டோக்கள் உங்களது அனுமதியுடன் சாட்-ஜிபிடிக்கு பகிரப்படும். அதன்பிறகு சாட்-ஜிபிடி கேபபலிட்டிக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும். இதற்கான கன்ட்ரோல் ஆப்பிள் யூசர்களிடம் இருக்கும்.

விசுவல் இன்டெலிஜென்ஸ்:
ஆப்பிள் டிவைஸ்களில் இருக்கும் ஆப்கள் உள்பட ஸ்கிரீனில் தெரியும் ஆப்ஜெக்ட்களை சர்ச்ச் செய்யவும், டேட்டாவை சேகரிக்கவும் முடியும். இதில் கேமரா மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில் இருக்கும், ஆப்ஜெக்ட்கள், இடங்கள் போன்ற அனைத்தும் அடங்கும். அதேபோல ஆப்பிள் யூசர்கள் சாட்ஜிபிடி மூலமும் விவரங்களை பெற்று கொள்ளலாம்.
வொர்க்அவுட் பட்ட்டி:
ஆப்பிள் வாட்ச் மூலம் ஃபிட்னஸ் டேட்டாவுக்காக வொர்க்அவுட் பட்ட்டி (Workout Buddy) களமிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வொர்க்அவுட் டேட்டா மற்றும் ஃபிட்னஸ் ஹிஸ்டரி ஏஐ மூலம் பர்சனலைஸ்டு செய்யப்படும். ஆகவே, ஃபிட்னஸ் மைல்ஸ்டோன், ஆக்டிவிட்டி தேவை ஆகியவற்றை ஏஐ மூலம் பெற்றுகொள்ளலாம். இதுவும் பிரைவேட்டாக இருக்கும்.
ஆப்பிள் வாட்ச் மூலம் ப்ளூடூத் ஹெட்போன்களிலும் வாய்ஸ் அவுட்புட்டாக பயன்படுத்தி கொள்ளலாம். இதில் அவுட்டோர் மற்றும் இன்டோர் ரன்னிங், வாக்கிங், அவுட்டோர் சைக்கிளிங் போன்ற பல்வேறு ஆக்டிவிட்டிகளும் அடங்கும். கிட்டத்தட்ட ஏஐ ஃபிட்னஸ் கோச் போல இந்த வொர்க்அவுட் பட்ட்டி பீச்சர் செயல்பட இருக்கிறது. ஆப்பிள் யூசர்களிடையே வரவேற்பு பெறும்.
ஆன்-டிவைஸ் மாடல்:
ஆஃப்லைனில் பயன்படுத்தும்படியான ஆன்-டிவைஸ் ஏஐ மாடல் களமிறங்கி இருக்கிறது. இதுவும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பேஸ்டு மாடலாகும். ஆஃப்லைனில் கிடைப்பாதால், யூசர் டேட்டாவுக்கு கூடுதல் பிரைவசி மற்றும் பாதுகாப்பு கிடைக்கிறது. இருப்பினும், ஃபிரேம்வொர்க் அவுட்புட் கொடுப்பதால், லிமிடெட் கேபபிலிட்டி மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








